நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படங்களால் சலாம். கிரிக்கெட்டையும் கிரிக்கெட்டில் உள்ள அரசியலையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். பிரபல லைக்கா ப்ரோடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவும் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், தன்யா பாலகிருஷ்ணன், அனந்திகா, கே எஸ் ரவிக்குமார், தம்பி ராமையா, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுமார் ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு லால் சலாம் படத்தின் மூலம் டைரக்ஷனில் களம்பிறகிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் தனது அப்பாவை நடிக்க வைத்துள்ளார்.
இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிக்கப்படாமல் இருந்ததால், படத்தை பிப்ரவரி ஒன்பதாம் தேதி வெளியிட பட குழுவினர் முடிவு செய்தனர். சமீபத்தில், படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில்,
லால் சலாம் படம் அடுத்தடுத்த பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. ஏற்கனவே, தமிழர்களை இழிவாக பேசிய நடிகை தனியாவுக்கு தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஏன் வாய்ப்பு கொடுத்தீர்கள் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழர்களும் போர் கொடி தூக்கினர். அதுமட்டுமின்றி, தமிழகத்தையும் தமிழர்களையும் இழிவாக பேசிய தனியா நடித்த லால் சலாம் படத்தை தமிழர்கள் அனைவரும் புறக்கணிப்போம் என்று சோசியல் மீடியா முழுவதும் படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி இருந்தன.
இப்படியான சூழலில், லால் சலாம் படத்திற்கு மற்றொரு பிரச்சனை வந்துள்ளது. தமிழ், தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள திரையரங்குகளில் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக உள்ள லால் சலாம் படத்திற்கு குவைத் அரசாங்கம் தடை விதித்துள்ளது. மேலும் லால் சலாம் படத்தில் விளையாட்டு தொடர்பான மாத அரசியல் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் அரசாங்கத்தை தொடர்ந்து மற்ற அரபு நாடுகளும் படத்திற்கு தடை விதிக்க உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. இதனால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உட்பட ஒட்டுமொத்த பட குழுவினரும் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கிருத்திக் ரோஷன் நடித்த பைட்டர் படமும், மலையாள நடிகர் மம்முட்டியின் காதல் தீ கோர் படமும் இரண்டு அரபு நாடுகளில் வெளியாகவில்லை.
தற்போது லால் சலாம் படமும் அதே பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.படத்தை ரிலீஸ் செய்ய இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், இன்னும் எத்தனை எதிர்ப்புகள் மற்றும் சர்ச்சைகளை சந்திக்க வேண்டியது உள்ளதோ என்று படக்குழுவினர் பீதியில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.