துபாயில் தொழில் அதிபராக இருக்கும் கேரளாவை சேர்ந்த ஆண்டனியை என்பவரை நடிகை கீர்த்தி சுரேஷ் 15 வருடங்களாக காதலித்து வந்துள்ளார், இந்நிலையில் இவர்களின் காதலை த இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இவர்களின் திருமணம் உறுதி செய்யப்பட்டது. விரைவில் கீர்த்தி சுரேஷ் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதை தொடர்ந்து வரும் டிசம்பர் 12ம் தேதி கோவாவில் ஆண்டனி என்பவருடன் கீர்த்தி சுரேசுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே கோவா சென்று செம்ம என்ஜோய் மூடில் உள்ளனர் கீர்த்தி சசுரேஷ் மற்றும் அவருடைய வருங்கால கணவரும், காதலருமான ஆண்டனி, மேலும் இவர்க்ளிண் திருமணம் ஹிந்து மற்றும் கிருஸ்துவ முறை படி இரண்டு தடவை திருமணம் நடை பெற இருக்கிறது. இந்நிலையில் கீர்த்தி சுரேசை திருமணம் செய்ய விஷால் வீட்டினர் பெண் கேட்டு சென்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி பிடிவாதமாக இருந்து வருகிறார். நடிகர் விஷால் சிங்கிளாக இருப்பதால், அவருடன் நடிக்கும் நடிகைகள் எளிதில் கிசுகிசுவில் சிக்கி விடுகின்றனர். அந்த வலையில் சிக்கிய பலரில் ஒருவர் லட்சுமிமேனன். இவர் தன்னுடைய சிறுவயதிலேயே நாயகியாக கும்கி படத்தில் அறிமுகமானவர். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷாலுடன் இணைந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இவர்கள் இணைந்து நடித்த அனைத்து படங்கள் ஹிட் ஆகி வந்தனர். அதுமட்டுமின்றி நான் சிகப்பு மனிதன் படத்தில், இவர்களின் கெமிஸ்ட்ரி பங்கமாக இருக்கும். இதனால் அப்பொழுதே இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் இருந்தன. மேலும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் பரவின ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் இருவரும் பிரிந்து விட்டதாக அப்போது சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து தன்னுடைய நீண்ட நாள் காதலியான வர லக்ஷ்மியை விரைவில் விஷால் திருமணம் செய்ய இருப்பதாகவும், நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடித்தவுடன் இவர்களின் திருமணம் தான் முதல் திருமணம் என்றெல்லாம் பேசப்பட்டு வந்த நிலையில் விஷால் – வரலக்ஷ்மி காதல் பிரேக் அப் ஆனது, காதல் பிரேக் ஆப் ஆன பின்பு விஷாலை மிக கடுமையாக பதிவு செய்து தன்னுடைய காதல் பிரிவை உறுதி செய்தார் வரலக்ஷ்மி.
இதனை தொடர்ந்து நடிகர் விஷால் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் பரவியது. மேலும் அனிஷாவும் தனது இணையதள பக்கத்திலிருந்து விஷாலுடன் எடுத்த புகைப்படங்கள், நிச்சயதார்த்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார்.
இதனை தொடர்ந்து அனிஷாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் முடிந்து , திருமணமும் முடிந்துது. இந்நிலையில் விஷால் குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தில் விஷாலும் கீர்த்தி சுரேஷும் ஒன்றாக நடித்தார்கள். அப்போது கீர்த்தி சுரேஷை விஷாலுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. அதனால் அந்தப் படத்தின் இயக்குநர் லிங்குசாமி மூலம் கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு விஷாலின் வீட்டினர் சென்றார்கள்.
ஆனால் கீர்த்தி சுரேஷ் குடும்பத்தினர் அதற்கு மறுத்துவிட்டார்கள். அப்போது கீர்த்தி இன்னொருவரை காதலிப்பதாகவும்; விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் கூறிவிட்டார்கள் என தெரிவித்துள்ளார் பயில்வான். இந்நிலையில் விஷால் திருமணம் செய்து கொள்வாரா.? என்பது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.