விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் கே பி ஒய் பாலா. பின்னர் அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார். மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் அவ்வப்போது கலாட்டா செய்து ரசிகர்களை என்டர்டெயின் செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைக்கும் பாலா, இன்று வரை நிறைய ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்.
குறிப்பாக யாரேனும் எங்கேயாவது கஷ்டப்படுவது குறித்து அவருக்கு தெரிய வந்தால், உடனடியாக அவர்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் கே பி ஓய் பாலா அதிக அளவில் ட்ரெண்டாகி வருகிறார். கே பி ஒய் பாலா இதுவரை நிறைய உதவிகளை செய்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கி உதவிக்கரம் நீட்டினார். அதைத்தொடர்ந்து, வறுமையில் சிக்கித் தவித்த பெண் ஒருவருக்கு ஆட்டோ வாங்கி பரிசளித்தார். அதேபோல் சமீபத்தில் பைக் இல்லை என்று ஏக்கத்துடன் கூறிய பெட்ரோல் பங்க் ஊழியருக்கு உடனடியாக பைக் ஒன்றை வாங்கி கொடுத்து அவரை ஆச்சரியப்படுத்தினார்.
அது மட்டும் இல்லாமல், சத்தியமங்கலம் பகுதி மலைவாழ் மக்களுக்கு ஐந்து ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கி கொடுத்து அசத்தினார். அரசாங்கம் கூட செய்யாத உதவிகளை கே பி ஒய் பாலா செய்திருக்கிறார் என்று மக்கள் தெரிவித்தனர். இவ்வாறு பல்வேறு உதவிகளை செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மக்கள் மத்தியில் நல்ல பேரை சம்பாதித்துக் கொண்டிருந்த கே பி ஒய் பாலா, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியது அவருக்கு எதிரான விமர்சனத்தை கொண்டு வந்திருக்கிறது.
இது குறித்த பிரபல சினிமா பத்திரிகையாளர் பேசுகையில், ஓடி ஓடி உதவி செய்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்த கே பி ஒய் பாலா, சமீபத்தில் நடந்த மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கும் விஷயம் அவர் மீது வேறு மாதிரியான பார்வையை ஏற்படுத்தி இருக்கிறது, “மேடை நிகழ்ச்சி ஒன்றில் ராகவா லாரன்ஸ் கே பி ஒய் பாலாவிடம் “இத்தனை மக்களுக்கு உதவுகிறாயே உன்னுடைய ஆசை என்ன?” என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு நான் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கே பி ஒய் பாலா கூறியதும் ராகவா லாரன்ஸ் திகைத்துப் போனார். மேலும் நீ எதற்காக ஹீரோவாக வேண்டும் என்று நினைக்கிறாய் என்று ராகவா லாரன்ஸ் கேட்டதற்கு, “நான் சினிமாவில் ஹீரோவாகிவிட்டால் கோடி கோடியாக சம்பாதிப்பேன் அந்த பணத்தை வைத்து இன்னும் நிறைய மக்களுக்கு உதவி செய்வேன் இதனால் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவேன்” என்று பாலா தெரிவித்துள்ளார்.
கே பி ஒய் பாலா ஹீரோவாக வேண்டும் என்று ஆசையை கூறிய விஷயம் இணையத்தில் காட்டு தீயாய் பரவ ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து இணையவாசிகள் பலரும் “பாலா எப்படியாவது ஹீரோ ஆகிவிட வேண்டும் என்பதற்காகவே பலருக்கும் உதவி செய்து பப்ளிசிட்டி தேடிக் கொண்டு வருகிறார்” என்று விமர்சித்து வருகின்றனர். பாலா உதவி செய்த போது அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டிய சிலர் அவருக்கு எதிரான விமர்சனங்களை தெரிவித்து வருவதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.