பிரபல பாடலாசிரியர் சினேகன், கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து, அதன் பின்பு படி படியாக படலாசிரியகராக உயர்ந்தவர், பல ஹிட் பாடல்களை எழுதியுள்ள கவிஞர் சினேகன், வித்தியாசமாக எதையாவது செய்து சர்ச்சையில் சிக்கி வருகின்றவர் சினேகன். இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான பாண்டவர் பூமி படத்தில் இடம் பெற்ற “தோழா தோழா” மற்றும் “அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்” பாடல்கள் மூலம் பிரபலமானவர்
சினேகன், இதன் பின்பு இயக்குனர் சேரன் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பு சினேகனுக்கு கிடைத்தது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சாமி படத்தில் கவிஞர் சினேகன் எழுதிய “கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” பாடல் பட்டி தொட்டியெல்லாம் தூள் கிளப்பியது, இதன் பின்பு சினேகன் முக்கிய பாடலாசிரியராக அறியப்பட்டார்,
![](https://dinaseval.com/wp-content/uploads/2025/02/snegan-kannika-1024x576.jpg)
ஆனால் தனக்கு கிடைத்த பிரபலம் மூலம் சில விஷயங்களில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கினார், டைனமிக் திருமணம் என மணப்பெண்ணை திருமண நிகழ்வுக்கு வந்த ஆண்கள் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிப்பது.மணமகனை திருமணத்துக்கு வந்த பெண்கள் கட்டி பிடித்து வாழ்த்து தெரிவிப்பது என தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான சில விசயங்களில் ஈடுபட்டு தனது பெயரை பஞ்சராக்கி கொண்டார் சினேகன்.
திரைக்கு பின்னால் மட்டுமே ஜொலித்துக்கொண்டு இருந்த சினேகனை விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் இவர் சிறப்பாக விளையாடிய போதும், கட்டிப்புடி சினேகன் என இணையவாசிகள் இவரை ட்ரோல் செய்யும் அளவிற்கு அந்த நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்களை கட்டிப்பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் ரன்னர் அப்பாகி 2வது இடத்தைப் பிடித்தார்
சினேகன் கடந்த 2021 ஆம் ஆண்டு நீண்ட நாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 43 வயதாகும் சினேகன் கடந்த வருடம் தன்னை விட 15 வயது குறைவான தொலைக்காட்சி தொடர் நடிகை கன்னிகா என்பவரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு இருவரும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக வீடியோ, புகைப்படங்களை எல்லாம் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இவர்கள் இருவருக்கும் 10 வருடம் வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, சந்தோஷமாக வாழ்ந்தும் வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில், தற்போது,கன்னிகா கர்பமாமனார், இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி சினேகன் மற்றும் கன்னிகா தம்பதியினருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது
இந்நிலையில், பாடகர் சினேகன் தனக்கு இரட்டை குழந்தை பிறந்தது குறித்து பேசுகையில், கல்யாணம் செய்து கொண்டதும், நாங்கள் முதலில் மூணு வருஷத்துக்கு குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்து வைத்திருந்தோம். ஏனென்றால், நாங்கள் 7 வருடமாக காதலித்தோம், நாங்கள் காதலித்த நாட்களில் வெளியில் சென்றது இல்லை, இருவரும் சந்தித்து பேசிக்கொண்டது இல்லை. இதனால் தான், எங்களின் காதல் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இருந்தது.
இதனால் திருமணமாகி இரண்டு வருடம் ஜாலியாக எங்கே எல்லாம் போக வேண்டும் என்று ஆசைபட்டோமோ அங்கே எல்லாம் போகலாம் என்று முடிவு செய்தோம். கன்னிகாவிற்கு மலைப் பிரதேசங்களும், குளிர் பிரதேசங்களும் ரொம்ப பிடிக்கும் என்பதற்காக அது போன்ற இடத்தை தேர்வு செய்து செல்வோம் என சினேகன் தெரிவித்துள்ளார்.