கங்குவா படம் தோல்வியை தொடர்ந்து வடிவேலு கதாபாத்திரத்தில் காமெடியில் வருவது போன்று டேய் ஒருத்தன் சிக்கி இருக்கான், நான் கொஞ்ச நேரம் அடிச்சிட்டு அனுப்பி விடுறேன், நீ கொஞ்ச நேரம் அடித்து அனுப்பிவிடு என்று சொல்வது போன்று நடிகர் சூர்யா மற்றும் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தொடங்கி அனைவரையும் வருகின்றவர்கள் போகின்றவர்கள் எல்லாம் அடித்து தூம்சம் செய்யும் வகையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
இதில் படம் பார்த்தவர்களை விட படம் பார்க்காதவர்களின் விமர்சனம் தான் அதிகமாக இருக்கிறது. காரணம் சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்கின்ற கூட்டங்கள் மொத்தமும் திரையரங்கு பக்கம் சென்று கங்குவா படத்தை பார்த்து இருந்தால், அந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கும். அந்த வகையில் படம் பார்த்தவர்கள் நல்லா இல்லை என்ற விமர்சனத்தை பார்த்து படம் பார்க்காதவர்கள். அந்த படத்தில் கதை என்ன மற்றும் மற்ற விவரங்களை விமர்சனம் மூலம் அறிந்து கொண்டு விமர்சனம் செய்து வருவது தான் சூர்யாவுக்கு நடக்கின்ற சத்திய சோதனை.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் அந்த படம் வெளியாவதற்கு முன்பு சூர்யா, அவருடைய தந்தை சிவக்குமார், அவருடைய உறவினர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இவர்களெல்லாம் கொடுத்த பில்டப் தான், குறிப்பா இந்த படத்தை பார்த்து விட்டா இந்த பேச்சு பேசுறீங்க என்று கேள்வி எழுந்தது. ஆனால் தற்பொழுது ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது, கங்குவா படம் வெளியாவதற்கு முன்பு முழு படத்தை சூர்யாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் முழுமையாக அந்த படத்தை பார்க்கவே இல்லை.
படத்தை முழுமையாக பார்க்காமலேயே இந்த அளவுக்கு ஆகா ஓகோ என்று பில்டப் கொடுத்ததாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. கங்குவா படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா அந்த படத்தில் சில காட்சிகளை கட் செய்து கட் செய்து மொத்தம் ஒரு 40 நிமிடம் வரை அந்தப் படத்தை சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் போட்டு காண்பித்துள்ளார். அதை பார்த்துவிட்டு தான் படம் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருக்கிறார் சூர்யா மற்றும் ஞானவேல் ராஜா இருவரும்.
வெறும் 40 நிமிஷம் படத்தை பார்த்துவிட்டு பரவசம் அடைந்த சூர்யா மற்றும் தயாரிப்பாளர் இருவரும் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தற்பொழுது பலத்த அடி வாங்கி வருகிறார்கள். இந்த நிலையில் உலகம் முழுவதும் நேரடியாக ஞானவேல் ராஜா இந்த படத்தை விநியோகம் செய்து இருப்பதால், இந்த படத்தில் அடைந்த இழப்பீடு காரணமாக கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயை திரும்ப தரவேண்டிய சூழலுக்கு படத்தின் தயாரிப்பு தரப்பு தள்ளப்பட்டுள்ளது.
மேலும் டிசம்பருக்குள் அந்த 100 கோடி ரூபாயை திருப்பி தரவில்லை என்றால் அந்த பணத்திற்கு மூன்று வட்டி போடப்படும் என்று கூறப்படுகிறது அந்த அந்த வகையில் ஞானவேல் ராஜா சூர்யாவின் பினாமி தான் சூர்யா என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படங்களுக்கு சூர்யா தான் பணம் கொடுப்பதாகவும், அதில் கிடைக்கும் லாபத்தில் சூர்யாவுக்கு பங்கு உண்டு என்பதால். தற்பொழுது கங்குவா பிரச்சனையில் 100 கோடியை திருப்பி தரவேண்டிய சிக்கலில் சூர்யாவும் மாட்டி கொண்டுள்ளதாக கூறப்படுவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.