நடிகர் சூர்யாவை தமிழ் சினிமாவுக்கு அடையாளப்படுத்தியவர் இயக்குனர் பாலா, அதன் பின்பு சூர்யாவை ஒரு மாஸ் ஹீரோவாக காக்க காக்க படத்தில் அடையாளப்படுத்தியவர் கௌதம் வாசுதேவ மேனன். அவரைத் தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்த சூர்யா அடுத்தடுத்து படங்களில் ஹரி இயக்கத்தின் நடித்து தனக்கென பெரும் ரசிகர் வட்டத்தை உருவாக்கினார் சூர்யா.
அதே போன்று கஜினி, 7ம் அறிவு போன்ற படங்கள் மூலம் சூர்யாவை உச்சத்தில் கொண்டு சென்று வைத்தவர் AR முருகதாஸ். இப்படி நேருக்கு நேர் படத்தில் சினிமாவில் அறிமுகம் ஆனா சூர்யா, அடுத்தடுத்து, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்து என ஒரு சீரியல் நடிகர் போன்றே பார்க்க பட்ட சூர்யாவை நந்தா படத்தில் மூலம் ஒரு நடிகருக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்து சூர்யாவுக்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்தவர் இயக்குனர் பாலா.
ஒவ்வொரு காலத்திலும் இயக்குனர் பாலா, கௌதம் வாசுதேவ் மேனன, ஹரி, AR முருகதாஸ் போன்றவ இயக்குனர்கள் சூர்யாவின் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்கள், குறிப்பாக, பலா, கவுதம் வீசுதேவ் மேனன் , ஹரி, AR முருகதாஸ் இவர்கள் மூவர் இயக்கத்தில் சூர்யா நடித்த படத்தை தவிர்த்து சூர்யா நடித்த மற்ற படங்களை பார்த்தால் ஒன்றும் சொல்லும்படி இருக்காது.
இப்படி சூர்யாவை சினிமாவில் தூக்கி விட்ட இயக்குனர்கள் எப்போது சரிவை சந்தித்து மீண்டும் சூர்யா நடிப்பில் ஒரு படம் இயக்க முன் வந்தால். அவர்களை புறக்கணித்து விடுவார் சூர்யா. அந்த வகையில் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில், மீண்டும் சூர்யாவிடம் கால்ஷீட் கேட்க இதுவரை சூர்யா கொடுக்கவில்லை. AR முருகதாஸ் மீண்டும் சூர்யாவை வைத்து படம் இயக்க கால் சீட் கேட்ட போது கொடுக்கவில்லை,
அதே போன்று சூர்யா நடிப்பில் அருவா படத்தை ஹரி தொடங்கினார், ஆனால் சூர்யா மற்றும் ஹரி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படம் கைவிடப்பட்டது, இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கு உதவி செய்தவர்களுக்கு கைமாறாக எதுவும் செய்யாமல் கழட்டி விட்டு வந்தவர் சூர்யா. தன்னுடைய குருநாதர் பாலா இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வி சந்தித்து மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் வணங்கான் படத்தை பாலா இயக்கிய வந்தார், ஆனால் சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் அடுத்து பாலாவின் சினிமா வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்த நிலையில் சூர்யாவுடன் ஓரளவு இறங்கி வந்து மீண்டும் இந்த வனங்கான் படத்தை எடுப்பதற்கான பல முயற்சிகள் பாலா மேற்கொண்டார். ஆனால் சூர்யா படம் பாதியிலே நின்றாலும் பரவாயில்லை, என்று கண்டு கொள்ளாமல் தன்னுடைய அடுத்த அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கினார்.
இப்படி தனக்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்தவர்களை எல்லாம் நன்றி இல்லாமல் சூர்யா நடந்து கொண்டதற்கு முக்கிய காரணம், தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது, என்னிடம் பணம் உள்ளது, நானே என்னுடைய படத்தை தயாரிப்பேன் என்கிற ஒரு தெனாவட்டில் இருந்த நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக பத்து வருடத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தொடர் தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் தற்பொழுது கங்குவா மூலம் பலத்த அடி வாங்கி சினிமாவில் இருந்து துடைத்து எறியப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் சூர்யா என்கிற விமர்சனம் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.