நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி உள்ள கங்குவா திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இந்திய சினிமாவில் மிகப் பிரம்மாண்டம் இது, 2000 கோடி வசூல் சாதனை படைக்க இருக்கிறது, பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு பிரம்மாண்டமான படைப்பு என்றெல்லாம் படக்குழுவினர் கொடுத்த பில்டப்பை நம்பி படம் பார்க்க போனது போன்று தான், தற்பொழுது பாகுபலியை மிஞ்சும் கங்குவா … படத்தில் உள்ள சுவாரசியத்தை கவனிச்சீங்களா என்ற தலைப்பை கேட்டு நீங்களும் இந்த வீடியோவை உள்ளே பார்க்க வந்திருப்பீர்கள்.
எப்படி நீங்கள் பாகுபலியை மிஞ்சும் கங்குவா என்ற தலைப்பை கேட்டு உள்ளே வந்தீர்களோ.! அதே போன்று தான் கங்குவா படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பு இந்த படத்திற்கு கொடுத்த பில்டப்பை நம்பி படம் பார்க்க சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளார்கள். அந்த வகையில் இந்த படத்தில் எந்த ஒரு பிரம்மாண்டமும் இல்லை குறிப்பாக இந்த படத்தில் சொல்லும்படியாக எந்த ஒரு சுவாரசியமும் கிடையாது.
அதாவது கங்குவா படத்தில் விஷுவல் ஆக ஒரு பரபரப்பாக காட்சிகளை எடுத்தால் மக்கள் பார்த்துவிட்டு அடடா என்னடா பாகுபலி மாதிரி மிக பிரம்மாண்டமாய் இருக்கே என்று நினைப்பார்கள் என்று படத்தில் விஷுவல் பரபரப்பு இருக்கே தவிர கதையிலையும் காட்சிகளிலும் எந்த ஒரு சுவாரசியமும் இல்லை. அந்த வகையில் பாகுபலி படத்தில் ஒரு கதை இருந்தது, சுவாரஸ்யம் இருந்தது, ஒவ்வொரு காட்சியும் மனதில் ஆழமாக பதியக்கூடிய வகையில் ஒரு படைப்பு இருந்தது.
அந்த படத்தில் ஒரு அழகான காதலும் இருந்தது. ஆனால் கங்குவா படத்தில் எதுவுமே இல்லாமல், பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு படம் வெளியாவதற்கு முன்பு பேசிய அந்த நபர் யார் என்று படம் பார்த்தவர்கள் பலரும் வலை வீசி தேடி வருகிறார்கள். கங்குவா படத்தில் ஒரு காட்சியில் கூட புதுசா ஏதும் சொல்லவில்லை. படம் முழுக்க ஒரே இரைச்சல் சத்தம் மட்டும்தான், படத்தின் கதையும் புரியவில்லை, இதில் இந்த மியூசிக் மேலும் தலைவலியை தான் கொண்டு செல்கிறது.
மேலும் இந்த படத்தில் vfx மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்த்தால் வீடியோ கேம் ரேஞ்சுக்கு தான் உள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் vfx திரைப்படத்திற்கான மாதிரி கிடையாது. குறிப்பாக இந்த படம் 3டி இல் வந்திருக்குவே கூடாது என்றுதான் 3டியில் பார்த்தவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். அந்த வகையில் கங்குவா படம் மிகப்பெரிய மொக்கை என்று பலராலும் கழுவி கழுவி ஊத்துவதை மீறி இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று மக்கள் நீங்கள் நினைத்தால் 3டியில் பார்க்க வேண்டாம் 2 டி யில் பாருங்கள்.
ஏன் என்றால் 3டியில் பார்த்தால் மேலும் உங்களுக்கு ஒரு எரிச்சலை தான் இந்த படம் உருவாக்கி கொடுக்கும், படம் முழுக்க ஒரே சவுண்டு தான். அதாவது காதல் செய்வது கூட ஒரு ரொமான்டிக்கா லவ் பண்ணாமல் நான் உன்னை காதலிக்கிறேன் என்று ஒரு சண்டை போடுவது மாதிரி தான் காதல் காட்சிகள் கூட இந்த படத்தில் டயலாக் அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் கதை ஒன்றுமே இல்லை காட்சிகளும் மிக பெரிய அளவில் சொல்லும்படியாக இல்லை, என்பதற்காக இசையை அதிகப்படுத்தி இரைச்சல் சத்தத்தை உருவாக்கி விட்டால் இந்த படத்தின் கதை பற்றி யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று இயக்குனர் திட்டம் போட்டாரா என்றே தெரியவில்லை அந்த அளவுக்கு ஒரு இரைச்சல் சவுண்ட் அதிகம். மொத்தத்தில் கங்குவா பற்றி ஒரே வரியில் உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.