சூர்யாவை கடனாளியாக்கிய கங்குவா… நெருக்கடி கொடுக்கும் கடன் கொடுத்தவர்கள்…

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள கங்குவா படம் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களிலே அதிகம் ட்ரோல் க்கு உள்ளான படங்களில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது கங்குவா. இந்த படம் குறித்து அப்டேட் வைரல் ஆனதை விட, இந்த படத்தி ட்ரோல் செய்யும் வீடியோ மிக பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அந்த அளவுக்கு போட்டி போட்டு கங்குவா, தூக்கு போட்டு தொங்கவா.? என்கிற ரேஞ்சுக்கு கங்குவா படத்தை வெச்சு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கங்குவா படம் வெளியவதற்கு முன்பு ஜஸ்வந்த் பந்தாரி என்கின்ற ஒரு பைனான்சியரிடம் சுமார் 75 கோடி ரூபா கடன் வாங்கி இருக்கிறது ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம். வாங்கிய 75 கோடி கடனை அடைத்தால் மட்டுமே கங்குவா படம் ஞானவேல் ராஜாவிற்கு சொந்தம். அப்படி வாங்கிய கடனை கிளியர் செய்யவில்லை என்றால் அந்த படம் கடன் கொடுத்த பைனான்சியருக்கு சொந்தம் என்பது 75 கோடி கடன் வாங்குவதற்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தம்.

அந்த வகையில் ஜெஸ்வந்த் பண்டாரி தனக்கு கொடுக்க வேண்டிய 75 கோடியை கொடுத்தால் மட்டுமே படத்திற்கான என்ஓசியை கொடுப்பார், அதன் பின்பு படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்கிற ஒரு சூழலில். கங்குவா படம் ரிலீஸ் செய்வதில் மிக பெரிய சிக்கல் கடைசி நேரத்தில் ஏற்பட்டது. இந்த நிலையில் கடைசி நேரத்தில் கங்குவா படத்தை ரிலீஸ் செய்வதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றது கங்குவா பட குழு.

அப்படி ஒரு சூழலில், நடிகர் சூர்யா தன்னுடைய கையில் இருந்து 35 கோடி பணத்தை ஜஸ்வந்த் பண்டாரிடம் கொடுத்து, மேலும் ஒரு சுருட்டி கொடுத்து பேலன்ஸ் 40 கோடி ரூபாய்க்கு படம் ரிலீஸ் ஆகும் ஒரு நாள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள். அதாவது படம் ரிலீஸ் ஆன அடுத்த நாள் 40 கோடி காட்டுகிறோம், அதனால் இந்த 35 கோடியை வாங்கி கொண்டு படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி தாருங்கள் என்று ஒரு நாள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து கங்குவா படம் ரிலீஸ் ஆக ஒரு நாள் மட்டுமே திரையரங்களுக்கான கேடிஎம் உரிமையை ஜஸ்வந்த் பண்டாரி கொடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து கங்குவா படம் ரிலீஸ் ஆகிறது அடுத்த நாள் 40 கோடியை பைனான்சியர் ஜஸ்வந்த் பண்டாரிடம் கொடுத்தால் மட்டுமே அடுத்தடுத்த நாட்கள் கங்குவா படம் ரிலீஸ் ஆகும் என ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இப்படி ஒரு நிபந்தனையில் ரிலீஸ் செய்த கங்குவா படம் வெளியாகி முதல் நாளில் பலத்த அடி வாங்கியது, அதாவது முதல் நாள் வசூல் வெளியே சொன்னா வெட்கக்கேடு, சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தின் பாதி வசூலை மட்டுமே பெற்றது. இந்த நிலையில் பைனான்சியரிடம் வாங்கிய பாக்கி கடன் 40 கோடியை கட்டவில்லை என்றால் அடுத்த அடுத்த நாட்கள் கங்குவா படம் திரையரங்குகளில் ஓட முடியாது.

இதனை தொடர்ந்து தற்பொழுது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு மேலும் ஒரு படம் நடிப்பதாக சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதற்கான அக்ரீமெண்ட் தயார் செய்து அந்த அக்ரிமெண்டை ஜஸ்வந்த் பண்டாரிடம் கொண்டு சென்று புதிதாக ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படத்திற்கு 40 கோடி ரூபாய் நெகட்டிவ் பைனான்ஸ் பெற்று தற்பொழுது கங்குவாவில் வாங்கிய கடனை அடைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இருந்தாலும் ஜஸ்வந்த் பண்டாரிடம் நிலுவையில் 40 கோடி ரூபாய் கடன் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கங்குவா படத்தை நம்பி சூர்யா மார்க்கெட் இமேஜை மட்டும் இழக்கவில்லை பணத்தையும் இழந்துவிட்டார் என்று, காரணம் ஞானவேல் ராஜா நடிகர் சூர்யாவின் பினாமி என்றும், அதனால் இது ஞானவேல் ராஜாவுக்கு ஏற்பட்ட நஷ்டம் இல்லை, சூர்யாவுக்கு ஏற்பட்ட நஷ்டம் என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here