கங்குவா படத்தில் மக்களை ஏமாற்றி மிகப்பெரிய அளவில் கல்லா கட்டுவதற்கு நடிகர் சூர்யாவும் அந்த படத்தின் தயாரிப்பாளரும் போட்ட திட்டங்கள் அம்பலமாகியுள்ளது. கங்குவா படம் வெளியாவதற்கு முன்பு இந்த படத்திற்கான பில்டப் என்பது மிகப்பெரிய அளவில் நடிகர் சூர்யா மற்றும் அந்த படத்தின் தயாரிப்பாளர் மூலம் கொடுக்கப்பட்டது. இப்படி பிட்டப் கொடுக்கப்படும் அந்த படம் மக்கள் மத்தியில் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது இரண்டாவது பட்சம்.
ஆனால் இவர்கள் கொடுத்த பில்டப்பை நம்பி கங்குவா படத்தை பார்க்க போனவர்கள், தப்பித்தோம் பிளைத்தோம் என வெளியில் ஓடி வந்து நடிகர் சூர்யா என கங்குவா படத்தின் மொத்த குரூப்பையும் கழுவி கழுவி ஊத்தி வருவதை பார்க்க முடிகிறது. கங்குவா படத்தில் சூர்யா செய்த பித்தலாட்டம் என்ன என்பதை பார்ப்பதற்கு முன்பு இவர்கள் கொடுத்த பில்டப்பை ஒரு முறை நினைவு படுத்துகிறோம். அதாவது ஒட்டு மொத்த இந்தியா சினிமாவே இந்த கங்குவா படத்தை வாயை பிளந்து பார்க்குமாம், படம் ரிலீஸ் ஆகும் முன்பு சூர்யா பேசியது.
மேலும் கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த படம் 2000 கோடி வசூல் அடிக்கும் என்று சொன்னது, இதெல்லாம் இந்த படத்திற்கு அவர்கள் கொடுத்த பிட்டப். இவர்களில் இந்த பித்தலாட்டம் பிட்டபின் முக்கிய நோக்கமே, படத்தில் மிகப்பெரிய அளவில் வருமானத்தை ஈட்ட வேண்டும். குறிப்பாக கங்குவா படம் 300 கோடி செலவு செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தை பார்த்த சினிமா துறையினர் கூட 300 கோடிக்கு இந்த படத்தில் என்ன இருக்கிறது என தலையை பீய்ச்சி கொண்டு இருக்கையில்.
திரையரங்கு உரிமையாளர்களையும், சினிமா ரசிகர்களையும் ஏமாற்ற சூர்யா செய்த பித்தலாட்டம் அமபலமாகியுள்ளது. கங்குவா படத்தில் சூர்யா சம்பளத்தை தவிர்த்து இந்த படம் வெறும் முப்பது கோடிக்குள் தான் செலவாயிருக்கும் என்கின்ற ஒரு தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யா இந்தப் படத்தின் நடிப்பதற்கு அவருக்கு 50 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.
அதாவது அவருக்கு அவரே கொடுத்துக் கொண்ட சம்பளம் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படங்களுக்கு சூர்யா தான் பணம் கொடுப்பதாக பரவலாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், சூர்யா அவருக்கு அவரே கொடுத்த 50 கோடி சம்பளம் என்பது, அவரே எழுதி கொண்ட போலி கணக்கு தான் இந்த 50 கோடி சம்பளம். சரி சூர்யா சம்பளத்தை தவிர்த்தால் கூட 250 கோடி இந்த குப்பை படம் கங்குவா க்கு செலவு ஆகி இருக்குமில்ல என்று நீங்கள் கேட்கலாம்.
அதற்கான விளக்கம் தான் இது, கங்குவா படத்தில் சூர்யா தவித்து, அந்த படத்தில் நடித்த வில்லன் நடிகர், மற்ற நடிகர், இயக்குனர், டெக்னீஷன் என மொத்த நபர்களின் சம்பளமே வெறும் பத்து கோடிக்குள் தான் என கூற படுகிறது. இந்த படத்தில் 75% சதவீகிதம் vfx இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் படத்தில் இவர்கள் கத்தி விட்டு சென்ற பெரும்பாலான காட்சிகள் கிரீன் மேட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள், vfx முறையில் திரைக்கு வந்துள்ளது.
இப்படி இந்த படத்தில் vfx காகா செலவு செய்யப்பட்ட பணம் 10 கோடிக்குள் தான் இருக்கும் என்றும், காரணம் ஒரு நிறுவனத்தில் கொடுத்து vfx செய்ய சொல்லி இருந்தால் 20 கோடி வரை செலவு ஆகும், ஆனால் கங்குவா படத்தை ஆட்களை நேரில் அழைத்து vfx வேலை நடைபெற்றுள்ளதால் 10 கோடிக்குள் தான் இந்த குப்பை படத்திற்கு செலவு செய்யப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
இதை தவிர்த்து மற்ற செலவு 10 கோடி என வைத்து கொண்டால் கூட மொத்தம் 30 கோடி தான் சூர்யா சம்பளத்தை சேர்க்காமல் கங்குவா படத்திற்கு செலவு செய்யப்பட்டிருக்கும் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் சூர்யா உட்பட பட குழு எதற்காக பில்டப் கொடுக்கிறார்கள். இவர்கள் என்ன முட்டாளா என்று கேட்டால் நிச்சயம் அவர்கள் முட்டாள் இல்லை. மக்களை முட்டாளாக்கி இந்த படத்தை பார்க்க வைத்து அவர்கள் கல்லாகட்ட போடும் பலே திட்டம் தான் இந்த பில்டப்.
இந்த குப்பை படத்திற்கு 300 கோடி செலவு செய்தோம் என்று திரையரங்கு ஓனர்களை நம்ப வைப்பதற்காக இது போல் பில்டப் கொடுத்து பல திரையரங்குகளில் இவர்கள் திரைப்படத்தை வெளியிட்டு சுமார் 500 கோடி, 600 கோடி கல்லாகட்டி அஜால் குஜால் வாழ்வதற்காக தான் இது போன்ற ஒரு போலி பிம்பத்தை உருவாக்கி கங்குவா என்கின்ற ஒரு குப்ப படத்தை பாகுபாலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்ததை நம்பி படம் பார்க்க போன மக்கள் காரி துப்பி வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.