விஷால் தமிழ் திரையுலக நடிகர், தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்க பொதுச்செயலார், என திரை உலகம் சார்ந்த அனைத்து அமைப்புகளிலும் முன்னிலை வகித்து வருகிறார். சமீபத்தில் முன்னால் நடிகர் சங்கத் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு கூட அஞ்சலி செலுத்த விஷால் வரவில்லை. தான் வெளிநாட்டில் இருப்பதாக அழுது கொண்டே ஒரு வீடியோவினை சமூக வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து தனது இரங்களை தெரிவித்திருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் ஜாலியாக ஒரு பெண்ணுடன் சுற்றி வரும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறைந்த தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நூற்றாண்டு விழாவை தயாரிப்பாளர் சங்கமும் இயக்குனர் சங்கமும் இணைந்து நடத்தினர். இந்த நிகழ்வுக்கு முக்கிய நடிகர்கள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
ஆனால் இந்த விழாவிற்கு நடிகர் விஷால் வரமாட்டார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டில் உள்ள விஷால் அங்கு இருந்து ஜனவரி 8ஆம் தேதி தான் சென்னை வருகிறாராம். அவர் நினைத்திருந்தால் இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னை வந்திருக்கலாம் ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. கலைஞர் 100 ஆண்டு விழாவை திட்டமிட்டு புறக்கணிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்க்காக தான் விஷால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வில்லை,
இந்நிலையில் விஜயகாந்த் மரணம் அடைந்துள்ள நிலையில், தமிழக மக்களே மிக பெரிய சோகத்தில் இருக்கும் போது, இப்படி ஒரு விழா தேவை தானா என விஷால் நினைத்ததால் தான் கலைஞர் நூறாண்டு விழாவில் பங்கேற்க வில்லை என சிலர் தெரிவித்து வந்தாலும், அதில் உண்மை இல்லை என்றும், இதற்கு காரணம் இவருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் நடுவே உள்ள பிரச்சனையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் உதயநிதி ஸ்டாலினை புகழந்த விஷால், சென்னை வெள்ளத்தில் போது ,மழைநீர் சேமிப்பு வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது? என கேள்வி எழுப்பிய விஷால்,இப்போது எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமான, கேவலமான விஷயமாக பார்க்கிறேன். உடனடியாக இதனை சரி செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும். எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள். வந்து உதவுங்கள்” என திமுக அரசை கடுமையாக சாடி இருந்தார் விஷால் ,
விஷால் மீது சினிமா துறையில் ஏகப்பட்ட முறைகேடு குற்றசாட்டுகள் உண்டு.பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி கொண்டு, அவர்களுக்கு இது வரை கால் சீட் கொடுப்பதில்லை, மேலும் வாங்கிய கடனை திருப்பி தருவதில்லை என விஷால் மீது ஏகப்பட்ட குற்றசாட்டு உள்ளது. விஷால் பொதுவாக இதுபோன்று பல போர்ஜரி வேலைகளை செய்து விட்டு, பாதிக்கப்பட்டவர்கள் நெருக்கடி கொடுத்தால், அவர்களிடம் எனது நண்பர் உதயநிதி தெரியுமா.? என்று உதயநிதி பேரை தவறாக பயன்படுத்தி வருகிறார் விஷால் என்கின்ற குற்றச்சாட்டும் இருந்து வந்துள்ளது.
இது உதயநிதி கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்கள் பாதிக்கப்பட்டவர்கள், இதனை தொடர்ந்து உதயநிதி பெயரை எங்கயும் தவறாக பயன்படுத்த கூடாது என உதயநிதி தரப்பில் இருந்து விஷாலுக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்பே விஷால் திமுகவை சீண்டும் வகையில் பிரதமர் மோடியை புகழ்வது, சென்னை வெள்ளத்தில் திமுக அரசுக்கு எதிராக பேசி வருவதற்கு பின்னணி காரணம் என கூறப்படுகிறது.
பல வருடமாக உதயநிதியுடன் நட்புடன் இருந்த விஷால் தற்போது அவரின் மீது ஏற்பட்ட மன கசப்பு என்று சொல்லப்படுகிறது. இது தான் கலைஞரின் நூற்றாண்டு விழாவிற்கு விஷால் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.