ஜெயம் ரவி ஏமாற்றி விட்டார்… கண் கலங்கி புட்டு புட்டு வைத்த மனைவி ஆர்த்தி…

0
Follow on Google News

ஜெயம் ரவி அவருடைய மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, இந்த நிலையில் இதற்கு முன்பு கேனிஷா என்கிற பெண்ணுடன் கிசு கிசுவில் சிக்கிய ஜெயம் ரவி, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கேனிஷா உடன் ஜோடியாக கலந்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து இந்நிலையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ரவி இந்த நிகழ்வுக்கு தன்னுடைய கோபத்தை கடுமையாக வெளிப்படுத்தியுள்ளார். அதில் பழிச்சொற்கள், வசைகள் அனைத்தையும் மௌனமாகவே தாங்கிக்கொண்டேன். என் பக்கம் உண்மையும் நியாயமும்இருந்தும் நான் பேசாமல் இருந்ததற்கு காரணம் என் குழந்தைகளுக்கு தந்தை மற்றும் தாய் இருவரிடையே யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதுதான் என தெரிவித்த ஆர்த்தி.

மேலும் இன்றைக்கு உலகம் கூர்ந்து பார்க்கும் காட்சிகளும், நாடகங்களும் வேறு, நடந்த உண்மை என்பது முற்றிலும் வேறு. எங்கள் விவாகரத்து வழக்கு இன்னும் சட்டபூர்வமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் 18 வருடங்களாக நான் காதலுடனும், நம்பிக்கையுடனும் கைகோர்த்து நடந்த ஒரு மனிதன் என் கைகளை மட்டுமல்ல தன் பொறுப்புகளில் இருந்தும் கைகழுவி சென்று இருக்கிறார் என தெரிவித்துள்ள ஆர்த்தி.

மேலும், பல மாதங்களாக அந்தக் குழந்தைகளின் பொறுப்பை என் தோள்களில் மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறேன். யாரும் அறியாமல் அந்தக் குழந்தைகள் சிந்தும் கண்ணீரையும் என்கைகள் தான் துடைத்துக்கொண்டிருக்கிறது இன்று அவர் புதிதாக முளைத்தவர்களுடன் புதியதொரு உறவை உருவாக்கி கொண்டதால் பழைய உறவு இப்பொழுது வெறும் செங்கல் சுவர் போல அவர் கண்களுக்குகாட்சியளிக்கிறது.

என் குழந்தைகளுக்கு அன்பும் அக்கறையும் கொடுப்பேன் என்ற அவரது வாக்குறுதியும் பறந்துவிட்டது. ஆனால் இன்றும் என்னை தான் பணத்தாசை பிடித்தவள் போல் சித்தரிக்கிறார்கள். அது மட்டும் உண்மை என்றால் இப்பொழுது அனைத்தையும் இழந்து நிற்கும் இந்த நிலையில் இல்லாமல் நான் சுயநலத்துடன் எப்பொழுதோ எனது பாதுகாப்பை கவனித்திருப்பேன்.

ஆனால் கணக்குபோட்டு வாழ்வதைவிட காதலுடன் வாழ்வது சிறந்தது என்றுநான் முடிவெடுத்ததால் தான் இன்று இந்த நிலையில்நிற்கிறேன் என தெரிவித்த ஆர்த்தி. மேலும் இன்றும் அந்த காதலுக்காக நான் வருத்தப்படவில்லை. ஆனால் அது பலவீனமாக புரிந்து கொள்ளப்படுவதை தான்தாங்க முடியவில்லை. இன்று என் குழந்தைகளுக்கு முறையே 10 மற்றும் 14 வயதாகிறது…. அவர்களுக்கு பொருளாதார ரீதியானபாதுகாப்பும், உறுதியும் மிகமுக்கியம்.

இன்று நடந்துகொண்டிருக்கும் சட்டவிவகாரங்களை புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் கைவிடப்பட்டதன் வலி அவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். எடுக்கப்படாத தொலைபேசி அழைப்புகள்,நிராகரிக்கப்பட்ட சந்திப்புகள், போலி சமாதான வாக்குறுதிகள் இவை அனைத்தும் காயங்களாக எங்கள் நெஞ்சில் இருக்கிறது என வேதனையை பகிர்ந்த ஆர்த்தி.

இன்று எங்கள் வாழ்க்கையில் குறுக்கே வந்தவர்களால் என் குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது அவர்கள் சிந்தும் கண்ணீர் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. என் வார்த்தைகளை நீங்கள் தவிர்க்கலாம் ஆனால் அந்த எதிரொலிக்கு நீங்கள் செவிசாய்த்து தான் ஆக வேண்டும்.

இப்பொழுதும் பழிவாங்கவோ பரபரப்புக்காகவோ நான்பேசவில்லை என் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவே போராடுகிறேன். இன்றும் உங்களை அப்பா என்று அழைக்கும் அந்த இருமகன்களுக்காக என்கண்ணீரை, கதறல்களை, கசப்பான அனுபவங்களை மறைத்துக்கொண்டு போல மேலும் மேலும் உயர்ந்துஎழுகிறேன் என ஆர்த்தி தன்னுடைய வேதனையை பகிர்ந்துள்ளார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here