ரஜினியுடன் ஜோடி சேர மறுத்த ஜெயலலிதா.! ரஜினி போதையில் அத்து மீறி நடந்து கொண்டது தான் காரணமா.?

0
Follow on Google News

1980 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பில்லா திரைப்படத்தில் நடிகை ஸ்ரீப்ரியா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா, ஆனால் இந்த படத்தில் நடிக்க ஜெயலலிதா மறுத்துவிட்டார், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இருவரும் நேரில் சென்று ஜெயலலிதாவிடம் எவ்வளவோ எடுத்து கூறியும் ஜெயலலிதா சம்மதிக்க வில்லை, இது குறித்து அப்போது பல்வேறு செய்திகள் வெளிவந்தது.

நடிகர் ரஜினிகாந்த் 1978, 1979 கால கட்டத்தில் போதைக்கு அடிமையாகி, மது அருந்துவது, போதை தரக்கூடிய பீடா சாம்பிடுவது என படப்பிடிப்பில் கூட போதையில் வந்து சென்றுள்ளார் என்கிற குற்றசாட்டு இருந்தது, மேலும் போதையில் பெங்களூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தகராறில் ஈடுபட்டது, தன்னை பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ஒருவரை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த வழக்கு, சென்னையில் தகராறில் ஈடுபட்டு வந்தது என தொடர்ந்து ரஜினிகாந்த் போதையில் பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் போதைக்கு அடிமையாகி பைத்தியமாக மாறிவிட்டார் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது, இத்துடன் ரஜினிகாந்த் சினிமா வாழ்கை குளோஸ் என கூறப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் குருநாதர் கே பாலசந்தர் அறிவுரையின் பேரில் போதையில் இருந்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த படம் தான் பில்லா, ஏற்கனவே ரஜினி மீது பல்வேறு சர்ச்சைகள் இருந்த நிலையில் பில்லா படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர ஜெயலலலிதா மறுத்து விட்டார் என அப்போது கூறப்பட்டது.

ஆனால் இதுகுறித்து அப்போது ஜெயலலிதா விளக்கம் கொடுத்திருந்தார், அதில் சினிமாவில் நடிப்பதில் இருந்து தான் விலகி பொது வாழ்க்கையில் ஈடுபட இருப்பதால் தான் பில்லா படத்தில் தனக்கு நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக ஜெயலலிதா தெரிவித்திருந்தார், இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் போதைக்கு அடிமையாகி தள்ளாடி வீதியில் விழுந்து கிடந்த போது, அவரை தூக்கி காரில் அழைத்து செல்வது, மேலும் போதையில் இருந்து விடுபட கே.பாலச்சந்தரை அழைத்து அறிவுரை கூற வைத்துள்ளார் நடிகை ஸ்ரீபிரியா.

இதனை தொடர்ந்து பில்லா படத்தில் நடிக்க ஜெயலலிதா மறுப்பு தெரிவித்ததும் அந்த கதாபாத்திரத்தில் தனக்கு உதவியாக இருந்த நடிகை ஸ்ரீபிரியாவை நடிக்க ரஜினிகாந்த் தான் இயக்குனரிடம் அப்போது வலியுறுத்தியுள்ளார், நடிகர் ரஜினிகாந்த் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது நடிகை ஸ்ரீபிரியா என கூறபடுகிறது. பல வருடங்கள் கடந்து தற்போது சினிமா பிரபலம் ஒருவர் இந்த விஷயத்தை வெளியில் தெரிவித்துள்ளார்.