இளையராஜாவை கிழித்து தொங்க விட்ட ஜேம்ஸ் வசந்தன்…இளையராஜா மட்டமான மனிதராம்..

0
Follow on Google News

இளையராஜா குறித்து மேடையில் வைரமுத்து மறைமுகமாக தாக்கி பேசிய பேச்சு மிக பெரிய விவாத பொருளாக மாறிய நிலையில், கங்கை அமரன் தனனுடைய அண்ணன் இளையராஜா பற்றி பேசிய வைரமுத்துவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மிக கடுமையாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக தற்பொழுது இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் நேரடியாக வைரமுத்துவை தாக்கி பேசியது மிகவும் தவறானது ந சுட்டி காட்டிய ஜேம்ஸ் வசந்தன், நல்ல திறமையான நபர்கள் எங்கே இருந்தாலும் எத்தனை தடை வந்தாலும் அவர்களின் கலை வெளியே தலைகாட்டி தான் தீரும், எந்த ஒரு பாடலாக இருந்தாலும் இசை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு மொழியும் முக்கியம் என தெரிவித்த ஜேம்ஸ் வசந்தன்.

மேலும் ஒரு பாடலுக்கு முகவரியாக திகழ்வது மொழிதான் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. இளையராஜா ” இது ஒரு பொன்மாலைப் பொழுது” பாடலை எழுதுவதற்கு வைரமுத்துவுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் வைரமுத்து பாடலாசிரியர் ஆகவே ஆகி இருக்க மாட்டார் என்றும் அவரை வளர்த்து விட்டதை தாங்கள்தான் என கங்கை அமரன் பேசுவது மிக தவறானது என தெரிவித்த ஜேம்ஸ் வசந்தன்.

அப்படி யானால், பஞ்சு அருணாச்சலம் அன்னக்கிளி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை இளையராஜாவுக்கு கொடுக்கவில்லை என்றால் அவர் இசையமைப்பாளராகவே ஆக இருக்க மாட்டார் யார் சொல்வது போல அல்லவா இருக்கிறது என ஜேம்ஸ் வசந்தன் வைரமுத்துவுக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இதற்கு முன்பு பேட்டி ஒன்றில் ஜேம்ஸ் வசந்த் பேசுகையில், இளையராஜா மாதிரி ஒரு மட்டமான ஆளை பார்க்கவே முடியாது, இளையராஜா ஒரு மனிதனாக மிகவும் மட்டமான ஒரு நபர், ஏனென்றால் கொஞ்சம் கூட முதிர்ச்சி இல்லாமல். ஒரு சாதாரண ஆளாக இருந்தால் நாம் இந்த அளவுக்கு அவரை விமர்சனம் செய்ய தேவையில்லை. சினிமா துறையில் பலர் அவரை சாமி என்று அழைப்பார்கள், நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் சாமி சாமி என்று தான் இளையராஜாவை அழைப்பார்.

ஏனென்றால் அந்த அளவுக்கு இளையராஜா ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர். ஆனால் ஆன்மீகத்தின் அதிக ஈடுபாடு கொண்டிருந்தாலும் வெளியில் மிகவும் அசிங்கமாக கூடியவர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கிறிஸ்துவ மதத்தை பற்றி தவறாக பேசி அவர்களின் நம்பிக்கையை அசிங்கப்படுத்துவது போல் இளையராஜா பேசியிருந்தார். இவர் முட்டாள் போன்று அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் ஏசு கிறிஸ்து வாழ்ந்தாரா.? வந்தாரா.? உயிர்த்தெழுந்தார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

இது அவருக்கு தேவையா.? என்ன சொல்ல வருகிறாராம், ரமண மகரிஷி ஒருத்தர் தான் செத்து உயிர்த்தெழுந்தார, கொஞ்சமாவது ஆன்மீக புரிதல் உள்ளவன் முதிர்ச்சி உள்ளவன் இப்படி பேசுவானா, ஒரு பண்பு உள்ளவன் எவனாவது இப்படி பேசுவானா, கோடிக்கணக்கான மக்கள் இயேசு கிறிஸ்துவை நம்புகிறார்கள், அப்படியானால் அத்தனை நபர்களையும் நாம் காயப்படுத்த வேண்டுமா.?

ஏனென்றால் இளையராஜா ஒன்றும் வரலாற்று ஆசிரியர் கிடையாது அத்தனை பெயரையும் கேவலப்படுத்த ஒரு ஈன புத்தி இருக்கே.? அதாவது நீங்கள் எல்லாம் தப்பு, நான் தான் சரி என்று என்று நினைக்கிற அந்த எண்ணம் இருக்கு இல்ல, அதனால தான் அவரை மட்டமான ஆட்கள் என்று சொல்கிறோம் என ஜேம்ஸ் வசந்த் ஒருமையில் இளையராஜாவை இதற்கு முன்பும் மிக கடுமையாக பேசியது குறிப்பிடதக்கது.