சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ரசிகர்கள் இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ள நிலையில், கடந்த 2ஆம் தேதி வெளிவந்த ஜெயிலர் டிரைலர் அதை இன்னும் அதிகரித்துவிட்டது. அந்த அளவிற்கு வெறித்தனமாகவும் மாஸாக இருந்தது ஜெயிலர் பட டிரைலர்.
தற்போது இந்த படம் ரிலீஸ்க்கு முன்னரே பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் ஐந்து மடங்கு நஷ்டத்தை உருவாக்கியுள்ளது. இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் குழம்பிப் போய் உள்ளனர்.
சூப்பர் ஸ்டார் படம் என்றால் தமிழ்நாடு மட்டுமல்ல , அமெரிக்கா, மலேஷியா என உலகம் முழுவதும் கொண்டாட்டமாக இருக்கும். அதுவும் குறிப்பாக மலேசியாவில் சிறப்பு காட்சிகள் திருவிழா போன்று இருக்கும்.
மற்ற நடிகர் படங்களை விட ரஜினிகாந்த் நடிக்கும் படங்களை அதிக விலை கொடுத்து வாங்கி மலேசியாவில் வெளியிடப்படுவார்கள், ஆனால் தற்பொழுது ஜெயிலர் படத்திற்கு மிக பிரியா சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ரஜினி மற்றும் இல்லாமல் முன்னணி நடிகர்கள் படத்தை வழக்கமாக மலேசியாவில் வாங்கி மலேசியாவில் வெளியிட்டு வருகின்றவர் விநியோகஸ்தர் மாலிக்.
இந்த முறை ஜெயிலர் படத்தின் மலேஷியா உரிமையை ஆறு கோடிக்கு விலை பேசி இருந்தார் மாலிக் இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் மகிழ்ச்சியில் இருந்து வந்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்தை மாலிக் வாங்கி வெளியிடுவதாக உறுதி செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், சிறிது நாட்களுக்கு முன்பு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையிலான பல விசாரணை அமைப்புகள் சேர்ந்து மாலிக் திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் அவரது நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டது.
அப்போது இந்திய ரூபாய் மதிப்பில் 68 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மேலும் 200 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் படி கைது செய்யப்பட்டுள்ள மாலிக் திரைப்பட விநியோகஸ்தர், அரசியல் தொடர்புடையவர் மற்றும் லஞ்சம், பணமோசடி, வரி ஏய்ப்பு மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளிலும் சந்தேகிக்கப்படும் கடத்தல் குழுவிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மாலிக் மிக பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளதால், ஜெயிலர் படத்தை வாங்கி மலேசியாவில் வெளியிட முடியாத சூழல் அவருக்கு ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக மாலிக் வினியோகஸ்தர் ஜெய்லர் படத்தை வாங்குவதிலிருந்து விலகிவிட்டார். இவரை தவிர மலேசியாவில் சொல்லிக்கொள்ளும்படியான விநியோகஸ்தர்கள் கிடையாது.
இதனால் என்ன செய்வது என்று யோசித்த சன் பிக்சர்ஸ் தற்போது லோட்டஸ் நிறுவனத்திற்கு ஜெயிலர் பட உரிமத்தை விற்றுள்ளது. அதுவும் வெறும் ஒரு கோடிக்கு மட்டுமே பெற்றுள்ளது. இந்த நிறுவனம் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் படம் வெளி வந்தால் பல மடங்கு கலெக்சனை தட்டி தூக்கி விடலாம் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.