இதெல்லாம் ஒரு மூஞ்சியா.. அசிங்கப்படுத்தி வெளியேற்ற பட்ட பிரதீப் ரங்கநாதன்.. வெற்றியின் பின்னனி தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த 2019 ஆம் ஆண்டு வேல்ஸ் பிலிம்ஸ், ஐசரி கணேசன் தயாரிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவருடைய இயக்கத்தில் தற்பொழுது வெளியாகியுள்ள லவ் டுடே படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது, இந்த படத்தை நடித்து இயக்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன், மேலும் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ்,ராதிகா, யோகி பாபு,மற்றும் பல நடித்துள்ளனர்.

இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய லாபத்தை அதன் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு பெற்றுத் தந்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் முதல் முதலில் சந்தித்தபோது லவ் டுடே படத்தின் கதையைத்தான் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தான் கதாநாயகனாக நடிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு ஐசரி கணேசன், நீ கதாநாயகனாக என்று சம்மதிக்கவில்லை. இதன் பின்பு அந்த லவ் டுடே கதையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, கோமாளி படத்தின் கதையை தெரிவித்து, ஐசரி கணேசனிடம் வாய்ப்பை பெற்றார், கோமாளி படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியானது. அதன் பின்பு லவ் டுடே படத்தின் கதையை கையில் எடுத்து முதல் முதலில் லைக்கா நிறுவனத்திடம் தெரிவித்து ள்ளார்.

லைக்கா நிறுவனத்திடம் அட்வான்ஸ் தொகையும் வாங்கி ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்ட பிரதீப் ரங்கநாதன், படத்திற்கான வேலைகளை தொடங்கினார், ஆனால் மிக குறைந்த சம்பளத்திற்கு தன்னை ஒப்பந்தம் செய்துள்ளார்கள் லைக்கா, யாராவது அதிகமாக 25 லட்சம் கொடுத்தால் அங்கே சென்று விடுவேன் என பிரதீப் தெரிவிக்க, இது லைக்கா நிறுவனத்தின் கவனத்துக்கு சென்றதும், தம்பி கிளம்புங்க காத்து வரட்டும் என பிரதீப் அங்கிருந்து விரட்டப்பட்டுள்ளார்.

இதன் பின்பு ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திடம் பேசி கமிட்டானார் பிரதீப் ரங்கநாதன், ஆனால் அவர்கள் படத்தை தொடங்குவதற்கு மிக தாமதப்படுத்தியதால். அதன் பின்பு ஏஜிஎஸ் நிறுவனத்திடம் சென்று கதையை தெரிவித்துள்ளார். கதையை கேட்ட தயாரிப்பாளர் அகரம் கல்பத்தி குடும்பத்தில் உள்ள அனைவரும் நிராகரித்துள்ளனர். ஆனால் கல்பாத்தி அகரம் மட்டும் கதை மிகவும் பிடித்துள்ளது கண்டிப்பா இந்த ப்ராஜெக்ட்டை செய்வோம் என்று ஒப்பந்தம் செய்து படத்திற்கான அனைத்து வேலைகளையும் தொடங்கியுள்ளார்.

இதன் பின்பு படத்தில் நடிக்க சத்யராஜிடம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நேரில் சந்தித்து கதையை தெரிவித்து, ஐந்து நாட்கள் மட்டும் கால் சீட் கொடுத்தால் போதும் என்று கேட்டுக்கொண்டார், கதையை கேட்டு விட்டு பிரதீப் ரங்கநாதன் மீது நம்பிக்கை இல்லாமல் வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார் சத்யராஜ். இருந்தும் பிரதீப் ரங்கநாதன் சத்யராஜிடம் நீண்ட நேரம் உட்கார்ந்து பேசி அவரை தன் வழிக்கு கொண்டு வந்து ஒரு வழியாக சமாதானம் செய்து இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது மிக பெரிய வெற்றியை பெற்றுள்ள லவ் டுடே திரைப்படம், அந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நான்கு மடங்கு லாபத்தை பெற்று தந்துள்ளது. மேலும் இந்த படத்தை மிஸ் செய்த தயாரிப்பு நிறுவனம் வருத்தத்தில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பெரும்பாலும் தமிழ் சினிமாக்கள் தமிழில் வெளியாகும் போது, தெலுங்கிலும் டப் செய்து வெளியிடப்படுவார்கள்.

ஆனால் லவ் டுடே படத்தை தெலுங்கில் டப் செய்வதற்கு யாரும் முன்வரவில்லை. ஆனால் படம் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றதும், இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடுவதற்கு தற்பொழுது தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது, பல நேரங்களில் அசிங்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிரதிப் ரங்கநாதன் பல சோதனைகளும் கடந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.