ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய தளங்களில் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த திரைப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்தது சன் பிக்சர்ஸ். இந்த படத்தின் மூலம் வசூலை அள்ள தீபாவளி நாளில் அதிக திரைகளில் ரிலீஸ் செய்தது. முதல் நாளும் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது.
படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வர ஆரம்பித்ததும் வசூல் அடுத்தடுத்த நாட்களில் படுத்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் தமிழகம் எங்கும் பெய்த கனமழையால் தியேட்டர்களில் ஈயாடவில்லை. இதனால் திரையரங்க வருமானத்தில் சன் பிக்சர்ஸுக்கு கையைக் கடித்திருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் திரையரங்கில் வெளியாகி 21 நாட்களுக்காகவே இன்று ஓடிடியில் படத்தை ஸ்ட்ரீம் செய்துள்ளது சன்பிக்சர்ஸ்.
இது சம்மந்தமாக திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் படம் தியேட்டரில் ரிலீஸாகி 30 நாட்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யவேண்டும் என ஒப்பந்தம் உள்ளது. ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதைக் காற்றில் பறக்கவிட்டு 21 ஆவது நாளே அண்ணாத்த படத்தை ஒளிபரப்பியுள்ளது என்பது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.