படு கேவலமாக அமைந்த இந்தியன் 2… இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா.? அனிருத்தை கழுவி கழுவி ஊத்திய ரசிகர்கள்.

0
Follow on Google News

கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது, இந்தியன் 2 திரைப்படம். இந்த படத்தை லைகா நிறுவனமும் ரெட் ஜெயிண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த படத்தின் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. இதுவரை படத்தின் போஸ்டர்களும், அவ்வப்போது சில வீடியோக்களும் வெளிவந்துள்ளன. ஆனால் அதை தவிர்த்து படம் குறித்த எந்த அப்டேட்களையும் படக்குழு வெளியிடாமல் இருந்தது. அதேபோல் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை OTT நிறுவனமான நெட்ஃபிக்ஸ் பரபரப்பான விலைக்கு வாங்கியுள்ளது.

இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் உரிமை 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கோலிவுட்டில் அனைவரும் மிக ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இந்தியன் 2 ஆகும். தற்போது இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்தியன் 2 படத்தை அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

அதன்படி தற்போது இந்தியன் 2 படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தியன் முதல் பாகத்தின் முடிவில் கமல்ஹாசன் பேசும் காட்சியுடன் தொடங்கும் இந்த க்ளிம்ஸ் வீடியோவில், நிழல்கள் ரவி கொலை செய்யப்படும் காட்சியும், மக்களிடம் லஞ்சம் வாங்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. மேலும் கம்பேக் இந்தியா என்ற பாடலுடன் சுமார் 2 நிமிடங்கள் கொண்ட இந்த க்ளிம்ஸ் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் சேனாபதி கதாபாத்திரத்திற்கு கிட்டதட்ட 105 வயது ஆகிறது. இந்தியன் படத்தின் கதையின்படி சேனாபதி கதாபாத்திரம் 1918ஆம் ஆண்டு பிறந்தவர். சுதந்திரத்திற்காக போராடியவர் என்பதெல்லாம் அனைவரும் அறிவோம். இப்படியிருக்கையில் ரசிகர்கள் பலரும், சேனாபதிக்கு 105 வயது ஆகிறது இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து இயக்குனர் ஷங்கர் விரைவில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி என்னதான், அனிருத்தின் இசைக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தாலும், இந்தியன் 2 படத்திற்கு இசைப்புயல் AR ரஹ்மான் இசையமைத்திருக்கலாம் என மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். லியோ படத்தில் ஆர்டினரி பர்சன் என்னும் பாடலின் இசை Otnickaவின் I am not outsider என்னும் பாடலின் இசை என பல விமர்சனங்கள் எழுந்தது. மேலும், Otnickaவும் இதுகுறித்த ஒரு பதிவினை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆனால், இது சம்மந்தமாக அனிருத் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. அதுமட்டுமில்லாமல், கோலமாவு கோகிலா படத்தின் ‘கல்யாண வயசு’ பாடலின் இசையம் வேறொரு பாடலின் காப்பி என யூட்யூப் அந்த பாடலை நீக்கியது. இப்போது இந்தியன் 2 படத்தின் இசையிலும் காப்பி இருப்பதாக மக்கள் விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள். இது குறித்த ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

1998இல் இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தின் கோலாம்பஸ் பாடலின் இசை இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஷங்கர் படத்தின் இசையை ஷங்கர் படத்திலேயே பயன்படுத்தியதாக அனிருத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள் மக்கள்.அதேபோல், இப்படியொரு இன்ட்ரோ வீடியோவை வெளியிட ரஜினி, மோகன்லால், அமீர்கான், ராஜமெளலி, கிச்சா சுதீப் போன்ற பான் இந்தியா ஸ்டார்ஸ் எல்லாம் எதற்கு எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எதிர்பார்த்ததை விட மிக மோசமான வரவேற்பைப் பெற்றுள்ள இந்தியன் 2 இன்ட்ரோ, தொடர்ந்து ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஆகோ ஓஹோ என்று சொல்வதற்கு ஏற்ப எதுவும் இல்லை. ஆக மொத்தத்தில் நல்ல கதையை சொதப்பி விட்டார்கள் என்பது போல் தெரிகிறது. அட்லீஸ்ட் இதற்குப் பிறகாவது கதையில் சில மாற்றங்களை வைத்து ட்ரெய்லரை நச்சென்று வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.