28 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் அப்போது சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது, ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு தேச உணர்வோடு எடுக்கப்பட்ட இந்தியன் போன்ற படங்கள் தொடர்ந்து வரவேண்டும் என அப்போது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது, இந்தியன் படத்திற்கு பின்பு பிரமாண்ட இயக்குனர் என பெயர் பெற்ற இயக்குனர் சங்கரின் படம் என்றாலே தேச நலன் என்பது நிச்சயம் இருக்கும் என ஒரு முத்திரை சங்கர் மீது விழுந்தது.
இந்நிலையில் சுமார் 28 வருடத்திற்கு பின்பு இந்தியன் 2 படம் தற்பொழுது திரையரங்கில் ரிலீஸாகி உள்ளது. இந்தியன் 2 படத்தில், நடிகர் சித்தார்த் அவர்களது நண்பர்கள் ‘பார்க்கிங் டாக்ஸ்’ என்ற யு டியூப் சேனலை நடத்தி வருகிறார்கள். ஊரில் நடக்கும் அவலங்களைச் சொல்வதுதான் அவர்களது சேனல். என்ன நடந்தாலும் இந்த ஊரைத் திருத்த முடியவில்லையே என ஆதங்கப்படுகிறார்கள். இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால்தான் இதை மாற்ற முடியும் என நினைக்கிறார்கள்.
சமூக வலைத்தளத்தில் ‘கம் பேக் இந்தியன்’ என ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்கிறார்கள் சித்தார்த் மற்றும் அவருடைய நண்பர்கள். வெளிநாட்டில் இருக்கும் இந்தியன் தாத்தா அவற்றைப் பார்த்து மீண்டும் இந்தியா வருகிறார். ஒரு ‘தங்க’ கோடீஸ்வரனையும், உயர் அதிகாரி ஒருவரையும் ‘வர்மம்’ மூலம் கொலை செய்கிறார் இந்தியன் தாத்தா. மேலும் இந்தியன் தாத்தா சொன்னது போல தங்கள் வீட்டையும் திருத்த சித்தார்த் அன்ட் கோ முயல்கிறது.
அதனால் ஒரு பேரிழப்பு நிகழ்கிறது. கோபமடையும் சித்தார்த் அன்ட் கோ இந்தியன் தாத்தாவை ‘கோ பேக்’ சொல்கிறது. தாத்தாவைத் தேடும் சிபிஐ அதிகாரி பாபி சிம்ஹாவும் அவரை சுற்றி வளைக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ஆக மொத்தத்தில், இந்தியன்2 ஒரு காலாவதியான திரைப்படம். நேர்மையான செய்திகளை கொடுக்க முயற்சித்தாலும், அது சரியான உணர்ச்சி மற்றும் நாடகம் எதுவுமின்றி சலிப்பான முறையில் அமைத்துள்ளது.
ஷங்கர் தனது பழைய திரைப்படங்களின் திரைக்கதை மீண்டும் செய்ய முயன்றார், ஆனால்
அந்த மேஜிக்கை மீண்டும் உருவாக்கத் தவறிவிட்டார். எல்லா உணர்ச்சிகளும் முற்றிலும் செயற்கையானவையாக இருப்பதால், ஒரு தொடர் நாடகம் போல் அமைத்துள்ளது இந்தியன் 2. சேனாபதியின் நுழைவுடன் படம் சுமார் 20 நிமிடங்களுக்கு நல்ல தொடக்கத்த பெற்றது, ஆனால் அதன் பிறகு படம் சலிப்பு தட்ட ஆரம்பித்து விடுகிறது.
திரைக்கதை மிகவும் மெதுவாகச் செல்கிறது. மூன்றாம் பாகம் இல்லாமல் இதிலேயே சுருக்கி இருந்தால் திரைக்கதை வேகமாக இருந்திருக்குமோ என தோன்றுகிறது. சேனாபதியின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கே அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றனர்.ஷங்கர் படங்களில் வழக்கமாக இருக்கும் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள் இந்த படத்தில் இல்லை. குறிப்பாக, முக அமைப்பு வேலைப்பாடுகள் செயற்கையாக இருப்பது போல் உள்ளது.
இந்தியன் தாத்தா முக அமைப்பு மக்கள் மனதில் ஓட்டவே இல்லை.படத்திற்கு பலம் சேர்க்க வேண்டிய அனிருத் ரவிச்சந்தர் இசை எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லைகமல்ஹாசனின் நடிப்பு மற்றும் படத்தின் கருத்து கவரப்பட்டாலும், திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பில் உள்ள குறைபாடுகள் ஏமாற்றமடையச் செய்கிறது.
பிரம்மாண்டமும் தயாரிப்பு மதிப்பும் நன்றாக இருந்தாலும், அனிருத்துக்கு ஒரு தாக்கமான ஸ்கோர் கொடுக்க இந்த படத்தில் ஸ்கோப் இல்லை. குறைந்த பட்சம் முதல் பாதியில் உட்கார முடியும் என்றாலும், இரண்டாம் பாதி அந்த வாய்ப்பை தரவில்லை பேரழிவு. அதாவது முதல் பாதி கொஞ்சம் இன்னும் நன்றாக எடுத்து இருக்கலாம், இரண்டாம் பாதி எடுக்காமலே இருந்து இருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு உள்ளது இந்தியன் 2.