இமான் விவகாரம்… சிவகார்த்திகேயன் மனைவியுடன் பிரச்சனையா.? புகைப்படம் வெளியிட்டு முற்று புள்ளி வெச்ச சிவகார்த்திகேயன்..

0
Follow on Google News

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்தவர். தனது முதல் ஓரிரு படங்களிலேயே குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயது ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார். இவர் நடித்துள்ள அயலான் படம் அடுத்த வருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK21 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, இப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு பாண்டிச் சேரியில் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு பிஸியாக படப்பிடிப்பில் களமிறங்கியிருக்கும் சிவகார்த்திகேயன், எவ்ளோ பிஸியாக இருந்தாலும் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட தவறவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இசையமைப்பாளர் இமான் கிளப்பி விட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த புகைப்படங்களை சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெற்றிக் கூட்டணியாக இருந்த இமான்-சிவகார்த்திகேயன் இடையே இப்போது பெரிய விரிசல் விழுந்துள்ளது. யூட்யூப் சேனல் ஒன்றில் சிவகார்த்திகேயன் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்த இமான், இதுவரை என்ன காரணத்தால் சிவகார்த்திகேயனுடன் பிரச்சினை என்பதை தெளிவாகக் கூறவில்லை. இதனால் சிவகார்த்திகேயனின் மொத்த இமேஜும் டேமேஜ் ஆகி விட்டது. இணைய வாசிகள் பலரும் இமானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து, சிவகார்த்திகேயனனை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும், நெட்டிசன்கள் பலரும் சிவகார்த்திகேயன் மீது தப்பில்லை என்றால், ஏன் அமைதியாக இருக்கிறார் என்றெல்லாம் கேள்வி எழுப்பி வந்தனர், இப்படியான நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், தன் குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடியப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவரது மகள் ஆராதனா, மகன் குகன் தாஸ், மனைவி ஆர்த்தி அனைவரும் சிரித்த படி இருக்கும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயன் இமானுக்கு பதிலடி கொடுத்து விட்டார் என்று கமெண்ட்களை வாரி இரைத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், சிவகார்த்திகேயனின் இரண்டு பிள்ளைகளும் இவ்வளவு சீக்கிரமா வளர்ந்துவிட்டார்கள் என்று கூறி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாடி வெளியிட்ட புகைப்படங்களுக்கு எக்கச்சக்கமான லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன.