மாரிசெல்வராஜ் பெயரை கேட்டதும் டென்ஷனான இளையராஜா.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

இந்தியா சினிமா இசையின் அடையாளமாக பார்க்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கை படம் உருவாக இருக்கிறது. ‘இளையராஜா’ என்றே பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார். இந்தப்படத்தை ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’, ‘கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார்.

இந்தப்படம் தொடர்பான துவக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், வெற்றிமாறன், இளையராஜா, தனுஷ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார். இந்த நிலையில் இந்தப்படம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் இளையராஜா, “ஆரம்பத்தில், இது என்னுடைய தனிப்பட்ட பயணமாக இருந்தது. ஆனால் இப்போது அது கதையாக மாறி, உலகம் முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான இசை ஆர்வலர்களின் இதயத்தை தொடப்போகிறது. முழு அணியும் வெற்றிபெற வாழ்த்துகள்!” என்று பதிவிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க இருந்ததாகவும், அதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் தெரியுமா? இந்தச் சூழலில் இளையராஜா பயோபிக் வாய்ப்பை மாரி செல்வராஜ் பெறாததற்கு பிரபல பத்திரிகையாளர் ஒரு காரணத்தை கூறியிருக்கிறார்.

அதில், “இளையராஜாவின் பயோபிக்கை இயக்குவதற்காக தனுஷ் தனக்கு பிடித்த இயக்குநர்கள் சிலரை இளையராஜாவிடம் அனுப்பி வைக்க முடிவு செய்திருக்கிறார். அதில் மிக முக்கியமானவராக மாரி செல்வராஜ் இருந்திருக்கிறார். ஆனால் மாரி செல்வராஜின் பெயரை சொல்லும்போதே இளையராஜா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதற்கு இளையராஜா சொன்ன காரணம், ‘நானும் மாரி செல்வராஜும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். அதனால் நாளை ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் படம் எடுத்திருக்கிறார்கள் என்று பெயர் வந்துவிடக்கூடாது’ என்று ராஜா சொன்னதுதான்.

அவர் இப்படி செய்தது மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இளையராஜாவை நாம் எந்த சமுதாய வட்டத்துக்குள்ளும் வைத்து பார்ப்பதில்லை என்பதுதான் உண்மை. அவரை எல்லா சாதியினரும் அப்படி ஒரு உயரத்தில் வைத்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்கையில் இளையராஜா தன்னை இப்படி ஏன் நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. என ஆதங்கப்பட்டு அந்த பத்திரிகையாளர்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் மிகப்பெரிய இசை மேதையெல்லாம் இளையராஜாவின் வீட்டிலிருந்து பாடலை படித்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இளையராஜாவுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்திருக்க வேண்டியதில்லை. மாரி செல்வராஜ் வேண்டாம் என்று அவர் சொன்ன பிறகுதான் அருண் மாதேஸ்வரனை இளையராஜாவிடம் அனுப்பி வைத்திருக்கிறார் தனுஷ். அருண் மாதேஸ்வரனை சந்தித்தபோது அவரிடம் இருந்த பணிவு உள்ளிட்டவை இளையராஜாவுக்கு பிடித்துப்போனது.

அதனையடுத்து இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரனே இயக்கட்டும் என்று கூறியிருக்கிறார்” என பத்திரிகையாளரின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே மாரி செல்வராஜ் கிராமிய பின்னணியில் இருந்து வந்தவர். அவருக்குத்தான் இளையராஜாவின் வீச்சு முழுமையாக புரியும். அவரையே இயக்குநராக ஃபிக்ஸ் செய்திருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் இன்னமும் கமெண்ட்ஸ்களை பார்க்க முடிவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இளையராஜாவின் பயோபிக்கை இயக்குவதற்காக மாரி செல்வராஜ் பெயரை தனுஷ் ஆரம்பத்தில் சொன்ன போது, வரட்டும் பேசலாம், என அழைத்து பேசி தன்னுடைய பயோபிக் படம் இப்படி தான் இருக்க வேண்டும் என இளையராஜா அவருடைய விருப்பத்தை தெரிவித்து, அதில் உடன்பாடு இல்லை என்றால் வேறு ஒரு இயக்குனரை தேர்வு செய்து இருக்கலாம், ஆனால் மாரிசெல்வராஜ் பெயரை கேட்டதுமே, வேண்டாம் என அவரை பார்க்க கூட இளையராஜா விரும்பாததற்கு பின்னனி என்னவாக இருக்கும் என உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.