சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தை தியேட்டரில் பார்க்க வந்தவர்கள்தான் ஏண்டா இந்தப்டத்தை பார்க்க வந்தோம் என்று அழுகிறார்கள். காரணம் கங்குவாவை விட ரெட்ரோ படு மொக்கை என கதறுகிறார்கள் ரசிகர்கள், படத்தின் முதல் அரை மணி நேரம் கொஞ்சம் விறுவிறுப்பாக ஆரம்பித்து ஓடினாலும் போகப் போக ஜவ்வாக இழுத்து…இரண்டாம் பாதியில் மீண்டும் நொண்டியடித்து தவழ்கிறது.
ஒரு கட்டத்தில் படம் முடிந்தால் போதும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்துவிடுகிறது. முதல் பாதி ஒரு கதையும், இரண்டாம் பாதியில் வேறொரு கதை பார்ப்பது போலும் ஒரு உணர்வு உள்ளது. இதுவே படத்திற்கு மைனஸ் ஆகவும் உள்ளது. ரெட்ரோ படத்தின் நீளமும் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் ரெட்ரோ படம் பல இடங்களில் சலிப்பை தட்டுகிறது.

இன்னும் சில காட்சிகளை கட் செய்து இருந்தால் நல்ல ஒரு படம் பார்த்த உணர்வு கிடைத்திருக்கும். Love, Laugh and War என ஏற்கனவே 3 பிரிவுகளாக படம் போகும் என்று பார்த்தால் அதையும் தாண்டி தம்மம், தி ஒன் என நீண்டுக் கொண்டே செல்லும் திரைக்கதையில் பல இடங்களில் கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து விடுகிறார்.
படம் ஆரம்பத்தில் சென்ற வேகத்திற்கு அப்படியே ஒரு கதையை செய்திருந்தால் கூட பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கும். அதை விட்டு விட்டு டேக் டைவர்ஸன் என்பது போல பல கிளை கதைகளாகவும் ஜகமே தந்திரம் படத்தில் வைத்தது போல குறியீடுகளாக வைத்து எடுத்த விதத்தில் பயங்கரமாக சொதப்பி விட்டார். படத்தின் இரண்டாம் பாதியை சற்று குறைத்திருக்கலாம். கனிமா பாடலில் வரும் சிங்கிள் ஷாட் நடனம், சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட பிளாஷ்பேக் காட்சி என படம் மேக்கிங்கில் வந்தாலும் கதையில் சுவாரஸ்யம் இல்லாமல் போவது ஏமாற்றமளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.
இத்தனை இருந்தாலும் கதையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆண்டாண்டு காலமாக தமிழ் சினிமாவின் அரைத்த மாவு என்பதால் போர் ரகம். கிட்டத்தட்ட கிளைமேக்ஸே யுகிக்கும்படியாக இருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ரெட்டோக்கு இந்த பில்டப் ஓவருதான்! கார்த்திக் சுப்பராஜ் தனது படங்களில் வழக்கமான ஒரு ஃபார்முலாவை பின்பற்றி வருகிறார்.
ஆனால் திரைக்கதை சரியாக இருந்தால் தான் ரசிகர்களை கவரும் என்பது நிதர்சனமான உண்மை. அதில் சற்று சரிவை சந்தித்திருக்கிறார்கள். காரணம் படம் எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என்ற புரிதல் ரசிகர்களுக்கு கிடைப்பதற்கே அதிக நேரம் எடுப்பதாக பலரின் கருத்தாக வெளிப்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜ் போர்ஷன் எல்லாமே ரொம்பவே சுமாராக எழுதப்பட்டு ரசிகர்களை சோதிக்கிறது.
ஸ்ரேயா பாடல் பெரிதாக ஈர்க்கவில்லை. நட்பு என சொல்லிக் கொண்டு அராஜகம் செய்யும் நாசர் மகனாக வரும் விதுவின் வில்லத்தனம் சில இடங்களில் வொர்க்கவுட் ஆனாலும், கடைசியில் பல்பு வாங்குகிறது. அதிலும், அந்த ஜடாமுனி கதை எல்லாம் கங்குவா படத்தின் பாதிப்பில் இருந்து இன்னமும் சூர்யா வெளியே வரவில்லைய என்று தான் கேட்கத் தோன்றுகிறது.கொஞ்சம் ஜில்லா, கொஞ்சம் லியோ, கொஞ்சம் கபாலி என மூன்று படங்களின் காக்டெய்ல்தான் இந்த ரெட்ரோ. அந்தவகையில் அதரப்பழசான கதையை கையில் எடுத்த கார்த்திக் சுப்புராஜ், அதற்கு புதுவித திரைக்கதை ஃபார்முலாவை கொடுக்க முயற்சி குதறி வைத்திருக்கிறார்.
தொடர்ந்து ஒரே பாணியிலான கதையை எழுதி வரும் கார்த்திக் சுப்புராஜ் இனி தன்னுடைய கதைத்தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு அழுத்தமான கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சூர்யாவுக்கு ரெட்ரோ படம் அவர் எதிர்பார்த்த கம்பேக் கொடுக்கவில்லை. மொத்தத்தில் ரெட்ரோ சூர்யாவின் சம்பவமாக இருக்கும் என நினைத்தால் பாவம் சூர்யாவை இந்தப்படம் சம்பவம் செய்து விட்டது.