என்னிடம் உள்ள ஆதாரத்தை வெளியிட்டு அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன்.! எடப்பாடியை மிரட்டி வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்.!

0
Follow on Google News

சர்ச்சைக்குரிய நடிகை மீரா மீதுன் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எச்சரிக்கும் விதத்தில் வீடியோ வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சையில் சிக்கி பிரபலமான மீரா மிதுன், அதன் பின்பு நடிகர் விஜய் ,சூர்யா, ரஜினிகாந்த் , கமல்ஹாசன் மற்றும் ஜோதிகா , சங்கீத விஜய் ஆகியோரை சமூக வலைத்தளத்தில் கடுமையாக பேசி வீடியோ வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார், இதனால் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் மறுக்க பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுகவில் இருக்கும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி அப்சரா ரெட்டி, பெங்களூரில் உள்ள மீரா மிதுனை குண்டர்களை அனுப்பி கொலை செய்ய தூண்டியதாக பரபரப்பு குற்றசாட்டை முன் வைத்துள்ளார், மேலும் இது குறித்து பெங்களூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட மீரா மிதுன் இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பாக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் திருநங்கை அப்சரா ரெட்டி தனக்கு எதிராக தமிழ் திரைப்பட துறையில் பல்வேறு வேலைகள் செய்துள்ளார், இவரின் அதிகாரத்தை பயன்படுத்தி கடந்த 7 வருடமாக என்னால் சென்னையில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த முடியவில்லை, இது போன்று பல்வேறு இடையூறுகளை செய்து வந்த அப்சரா ரெட்டி தற்போது தன்னை கொலை செய்ய ரவுடிகளை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தவர்.

திமுக தலைவர் முக ஸ்டாலினால் தனக்கு இது வரை எந்த ஒரு பிரட்சனையும் இல்லை, அவர் மிகவும் நல்லவர் என புகழாரம் சூட்டிய மீரா மிதுன். அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அப்சரா ரெட்டியை அந்த கட்சியில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனே நீக்க வேண்டும் இல்லையென்றால் என்னிடம் உள்ள ஆதாரத்தை வெளியிட்டு அதிமுகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதாக பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார் மீரா மிதுன்.

மேலும் நான் தமிழ்நாட்டு பிரஜை அதனால் தமிழ்நாட்டில் இருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தான் என்னுடைய பிரச்னை கூற முடியும், அதனால் இந்த விவகாரத்தில் உடனடியாக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தவர், இதற்கு முன் நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரை தவறாக புரிந்து கொண்ட கடுமையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்பதாக தெரிவித்து மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.