இதெல்லாம் என்கிட்ட வெச்சுகாத.. அட்லீயை லெப்ட் ரைட் வாங்கிய ஷாருகான்.. எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த அட்லி, தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகனார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார் அட்லி. இவர் இயக்குனராக அறிமுகமான ராஜா ராணி படம் கதை ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் படத்தின் கதையை காப்பி அடித்துள்ளார் அட்லி என்கிற விமர்சனமும் உண்டு.

அட்லீ மற்ற படங்களில் கதை திருடுவது குறித்து எழுந்த சர்ச்சைக்கு ஒரு முறை பதிலளித்தவர் . சினிமாவில் 7 ஸ்வரங்கள் தான் உள்ளது, அதனால் இந்த ஏழு ஸ்வரங்கள் சுற்றி சுற்றி மீண்டும் மீண்டும் வரும், அந்த ஏழு ஸ்வரங்களை தாண்டி எதுவும் செய்ய முடியாது என கதையை காப்பியடிப்பதை கூச்சமே இல்லாமல் நியாய படுத்தி பேசி இருந்தார் அட்லீ.

அட்லி பிற படங்களில் கதையை திருடி இருந்தாலும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப காட்சிகளை வடிவமைத்து தன்னுடைய திறமையை நிரூபிக்க கூடியவர் அட்லீ. இரண்டாவது படம் நடிகர் விஜயை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்ற அட்லீ, அந்த படம் மிக பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து அடுத்தடுத்து விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்று தொடர்ந்து மூன்று படங்கள் விஜய்யை வைத்து இயக்கினார்.

கடந்த பத்து வருடத்தில் நன்கு படங்கள் மட்டுமே இயக்கியுள்ள அட்லீ. முதல் இரண்டு படம் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை பெற்று தந்தது. விஜய் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான மெர்சல் மற்றும் பிகில் ஆகிய இரண்டு படங்களுமே வியாபார ரீதியில் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் இதன் பின்பு பெரிய பட்ஜெட் படம் எடுப்பதை கைவிட்டு விட்டனர்.

அந்த அளவுக்கு தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தும் வகையில், மெர்சல், பிகில் போன்ற படங்களில் நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டை மீறி, பணத்தை வீண் விரையம் செய்தது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியவர் அட்லீ. தற்பொழுது சாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. இந்த படத்தை சொந்தமாக தயாரிக்கிறார் ஷாருக்கான், படப்பிடிப்பில் பணத்தை வீண் விரயம் செய்கிறார் அட்லீ என்கிற தகவல் ஷாருக்கான் கவனத்துக்கு சென்றுள்ளது.

இதனை தொடர்ந்து தயாரிப்பு நிறுவன பொறுப்பாளர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார் ஷாருக்கான். படப்பிடிப்பிற்காக வாடகைக்கு எடுக்கப்படும் ஜெனெரேட்டர், லைட், மற்றும் இதர பொருட்கள் பயன்படுத்தாமல் சும்மாவே இருக்கிறது, மேலும் செட் போட்டு ஒரு காட்சி கூட எடுக்காமல் செட் பிடிக்கவில்லை என்று பிரிக்க சொல்லியுள்ளார் அட்லீ, இது போன்று பணத்தை வீண் விரயம் செய்து வந்துள்ளார்.

மேலும் வாடகைக்கு எடுக்கும் பொருட்கள், மற்றும் செட் அமைக்கும் கம்பெனி அகியோரிடம் இருந்து அட்லீ கமிஷன் வாங்குவதாக ஷாருகானுக்கு தகவல் சென்றுள்ளது. உடனே அட்லீயை அழைத்து, இந்த படத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயார், ஆனால் பயனுள்ளதாக இருக்க வேண்டும், வீண் விரயம் செய்ய கூடாது, பல பொருட்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு பயன்படுத்தமலே உள்ளது என சுட்டி காட்டிய ஷாருகான். இதெல்லாம் என்கிட்ட வச்சுக்காத என்று அட்லீயை கோபத்துடன் லெப்ட் ரைட் வாங்கியதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.