தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி வசூல் சாதனை படைக்கும் அளவுக்கு இதுவரை எந்த ஒரு படமும் படமும் வரவில்லை, சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் 2000 கோடி வசூல் சாதனை படைக்கும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் ஓவர் பில்டப் கொடுத்தாலும் கூட முக்கி முக்கி நூறு கோடியை கடப்பதற்கு நாக்கு தள்ளி விட்டது கங்குவா. ஒரு படத்தின் மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் மக்களுக்கு அந்த படம் பிடித்து விட்டது என்றால், எந்த கொம்பாதி கொம்பனாலும் திட்டமிட்டு அந்தப் படத்தை தோல்வி அடைய செய்ய முடியாது.
அதற்கு மிகப் பெரிய உதாரணம் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் புஷ்பால் 2 திரைப்படம். ஒரு நடிகர் தன்னை எந்த அளவுக்கு வருத்தி அர்ப்பணிப்போட நடித்திருப்பார் என்பதற்கு புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பை பார்த்தாலே தெரியும். இதுதான் அந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமும் கூட. புஷ்பா 2 தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, இதையெல்லாம் தாண்டி வட மாநிலங்களில் சக்கை போடு போட்டு வருகிறது.
ஒட்டுமொத்த பாலிவுட் சினிமா முன்னணி தயாரிப்பாளர்களும், நடிகர்களும் வட மாநிலங்களில் புஷ்பா 2 திரைப்படம் இப்படி சக்கை போடுவதற்கு என்ன காரணம் என்று தெரியாமலே குழம்பிப் போய் உள்ளார்கள். அந்த அளவுக்கு மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. 3 வருடங்களாக எடுக்கப்பட்ட புஷ்பா 2 திரைப்படம் ஒரு தெலுங்கு படமாக பார்க்கப்பட்டாலும் கூட ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தாலும் அந்த தோல்வியை இதுவரை அந்த படத்தில் நடித்த நடிகர் சூர்யாவும் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா யாருமே ஒப்புக்கொள்ளவில்லை. புஷ்பா 2 படத்துடன் கங்குவா படத்தை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, கங்குவா படத்திற்கு எந்த அளவுக்கு ரிலீசுக்கு முன்பு பில்டப் கொடுத்தது போன்று,
புஷ்பா 2 படம் ரிலீஸ் க்கு முன்பு இது மாதிரியான பில்டப்பை கொடுத்தார்களா என்றுகேட்டால் கிடையாது. குறிப்பாக ரசிகர்கள் ஒன்று முட்டாள்கள் அல்ல, நீங்கள் கொடுக்கும் பில்டப்பை நம்பி திரையரங்கில் வந்து ஒரு மொக்கை படத்தை கொண்டாடுவதற்கு, கங்குவா படம் தோல்விக்கு, என்னமோ ஒவ்வொரு திரையரங்குகளுக்கும் சூர்யாவை பிடிக்காதவர்கள் கூட்டம் கூட்டமாக சென்று திட்டமிட்டு படம் நல்லா இல்லை என்று ரிவ்யூ கொடுத்து காலி செய்தது போன்று சூர்யா தரப்பு பேசி வருகிறது.
ஆனால் மதுரையிலையும் கங்குவா படம் நல்லா இல்லை என்று தான் சொன்னார்கள், ஊட்டியிலும் நல்லா இல்லை என்று தான் சொன்னார்கள் நல்லா இல்லாத படத்தை நல்லா இல்லை என்று தான் சொல்வார்கள், தற்பொழுது புஷ்பா 2 பாருங்க மதுரையிலும் நல்லா இருக்கு என்று கொண்டாடுகிறார்கள், ரசிகர்கள் ஊட்டியிலும் நல்லா இருக்கிறது கொண்டாடுகிறார்கள். இதற்கு காரணம் படம் நன்றாக இருந்தால் மக்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்,
இந்நிலையில் புஷ்பா 2 இந்தியில் மட்டும் 5 நாட்களில் ரூ.339 கோடியை வசூலித்துள்ளது. இந்தியில் அதிவேகமாக ரூ.300 கோடி வசூலை எட்டிய படம் என்ற சாதனையை படைத்துள்ளது. தமிழகத்தில் படம் முதல் நாளில் ரூ.11 கோடியை வசூலித்தது. 5 நாட்களில் ரூ.35 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரூ.300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.922 கோடியை வசூலித்துள்ள நிலையில்,
விரைவில் ரூ.1000 கோடியை எட்டலாம் என திரை வர்த்தகர்கள் கணித்துள்ளனர். மேலும் இப்படம் ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ரூ.1300 கோடி சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் இது போன்று 1000 கோடி வசூல் சாதனை படைக்கு படம் வருமா.? என்று உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.