ராயன் படம் எப்படி இருக்கு.? இது தனுஷ் இயக்கி நடித்த படத்தின் முழு விமர்சனம்..

0
Follow on Google News

கடந்த 2017 ஆம் ஆண்டு பவர் பாண்டி என்கின்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராக அறிமுகமான தனுஷ் , தற்போது தன்னுடைய 50வது திரைப்படம் ராயனை தானே இயக்கி நடித்து இருக்கிறார். பவர் பாண்டி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது போல ராயன் படமும் ஹிட் அடித்ததா, இல்லையா, படம் எப்படி இருக்கிறது என பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராயன் படத்தில், சிறுவயதில் தனது பெற்றோரை இழந்து தவிக்கும் அண்ணனான தனுஷ், தனது தம்பிகளான சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம், தங்கை துஷாரா விஜயன் ஆகியோரை வளர்த்து வருகின்றார். அப்போது இவர், தன் தங்கையை விற்பதற்காக கிராமத்தில் பிளான் போடுவதை பார்த்து, தன் குடும்பத்தை காப்பாற்ற வடசென்னைக்கு சென்று அங்கு வாழ்ந்து வந்தபோது, எதிரிகளால் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

இவர்களிடம் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்ற எதிரிகளை தேடிப்பிடித்து முடித்து கட்ட, என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் கதையாக அமைந்துள்ளது. இதில் முதல் பாதி வெறித்தனமாக இருக்கின்றது. அதேபோல் இரண்டாம் பாதி வெறித்தனத்தின் உச்சமாகவும் அமைந்துள்ளது. மேலும் இன்டர்வெல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் அனல் பறக்கின்றது என ரசிகர்கள் ரிவ்யூ கூறிவருகின்றனர்.

மேலும் ராயன் படத்தில் தனுஷ் மற்றும் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு அபாரமாக இருக்கிறது என்றும் பலர் கூறிவருகின்றனர். அதோடு, இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனதுக்கு முக்கிய காரணமே ஏ.ஆர் ரகுமானின் இசை தான். இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் போட்ட மியூசிக் தான் படத்தின் இரண்டாவது ஹீரோ என்றே சொல்லலாம். அப்படி ராயன் வெற்றியடைய மிகப்பெரிய பலமாக ஏ.ஆர்.ரகுமானும் இருந்திருக்கிறார்.

ராயன் படத்தில் ட்ரெயிலர் வெளியானதில் இருந்தே, உசுரே நீ தானே என்ற பாடல் அனைவரின் ஃபேவரிட் பாடலாகவே மாறி, தனி கவனம் பெற்றது. தற்போதும் அதே போல் தான், தனது மொத்த வித்தையையும் ஏ.ஆர் ரகுமான் தனுஷுக்காக ராயன் படத்தில் இறக்கி மியூசிக் போட்டிருக்கிறார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி டைரக்டரில் ஒருவராக இருப்பவர் தான் வெற்றிமாறன்.

தற்போது நடிகர் தனுஷூம் தனது ராயன் திரைப்படத்தை, வெற்றிமாறன் இயக்கியிருந்தால் எப்படி இருக்குமோ, அதே போல் இயக்கியிருக்கிறார் என்றும், தனது அண்ணன் செல்வராகவனின் இயக்கமும் கொஞ்சம் உள்ளே கலந்து, பிரம்மாண்டமான ஒரு படைப்பாக மாறியிருக்கிறது என ரசிகர்கள் ராயன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இதில் பலர் ராயன் படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது, ஒரு சீன் கூட போர் அடிக்கல, இன்டெர்வல் சீன் வெறித்தனமாக இருந்தது. பிளாக்பஸ்டர் ஹிட் என்று பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்தாலும், சிலர் இதில் சண்டை காட்சிகள் அதிகமாக இருப்பதை கொஞ்சம் குறைத்திருக்கலாம் எனவும் கூறிவருகின்றனர்.

அதேபோல், நடிகர் தனுஷின் முதல் இயக்கமான பவர் பாண்டி படம் போல், வித்தியாசமான கதை இதில் இல்லை, இது வடசென்னை பார்ட்-2 படம் போல் இருக்கிறது என்றும் கருத்துக்களை கூறிவருகின்றனர். இருப்பினும் எது எப்படி இருந்தாலும் தனுஷ் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய விருந்தாகவே அமைந்துள்ளது என்றும் சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.