நடிகர் விஜய் சேதுபதி எதார்த்தமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். விஜய் சேதுபதி நடித்த 96 படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து விஜய் சேதுபதியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற திரைப்படம் 96, இந்த படத்தை எடுத்த தயாரிப்பாளர் இந்த படத்தை வெளியிடும் பொழுது மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இருந்து வந்தார்.
அப்போது தயாரிப்பாளர் லலித் இந்த படத்திற்கு உதவி செய்து 96 படத்தை திரையில் வெளியிடுவதற்காக முக்கிய காரணமாக இருந்தவர். தொடர்ந்து லலித்க்கும் – நடிகர் விஜய் சேதுபதி நல்ல ஒரு நட்பு இருந்து வந்தது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதற்கு காரணமாக இருந்தவரும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தான் என்று கூறப்படுகிறத.
இதனால் மாஸ்டர் திரைப்படத்திற்கு பின்பு விஜய் சேதுபதியின் சம்பளமும் அதிகரித்தது , மேலும் பிற மொழிகளிலும் வில்லன் கதாபாத்திரத்திற்கான வாய்ப்புகள் விஜய் சேதுபதிக்கு வந்து குவிந்தது. லலித் தயாரிப்பில் விஜய் சேதுபதி இரண்டு படங்களுக்கு நடிப்பதாக கால்ஷீட் கொடுத்து அந்த இரண்டு படத்திற்கான அட்வான்ஸ் தொகையும் பெற்றிருந்தார்.
ஆனால் சமீப காலமாக சேதுபதியின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் இருந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் விஜய் சேதுபதியின் நடவடிக்கைகளால் லலித்க்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக உரசல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்குமான உரசல் உச்சகட்டத்தை அடைந்ததும்
.நேரடியாக விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு சென்று எனக்கு நீ கால் சீட்டும் கொடுக்க வேண்டாம், என்னுடைய படத்திலும் நடிக்க வேண்டாம், நான் இரண்டு படத்திற்கு உன்னிடம் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடு என்று பிடிவாதமாக இருந்து அந்த இரண்டு படத்தின் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்கி தன்னுடைய தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில் இருந்து விஜய் சேதுபதியை அந்த படத்தில் இருந்து லலித் வெளியேற்றி விட்டார் கூறப்படுகிறது