ஒரே நேரத்தில் அஜித் – விஜய் இருவர் மீதும் சவாரி செய்யும் திரிஷா… இருவரையும் வளைத்து போட்டது எப்படி தெரியுமா.?

0
Follow on Google News

துணை நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி மிகக் குறுகிய காலத்திலேயே டாப் ஒன் நடிகையாக வலம் வந்தவர் நடிகை திரிஷா. இவர் முன்னணி நடிகையாக கடந்த காலங்களில் வலம் வந்ததற்கு முக்கிய காரணம் அவருக்கும் முன்னணி நடிகர்களுக்கும் இடையில் இருந்த நெருக்கம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பல முன்னணி ஹீரோக்கள் தங்களுடைய படத்தில் திரிஷாவை நடிக்க வைப்பதற்கு அவர்களே நேரடியாக சிபாரிசு செய்யும் அளவிற்கு நடிகை திரிஷாவுக்கு முன்னணி நடிகர்களுக்கும் நெருக்கமான நட்பு இருந்து வந்துள்ளது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் ஒன் நடிகர்களான அஜித் – விஜய் இருவருக்கும் தொழில் ரீதியாகவும் போட்டி இருந்தாலும் கூட, மேலும் அஜித் படத்தை இயக்கும் இயக்குனருக்கு, விஜய் வாய்ப்பு தருவதில், விஜய் பட இயக்குனருக்கு அஜித் வாய்ப்பு தருவதில்லை என்கிற விமர்சனம் உள்ளது, ஆனால் இவர்கள இவரிடமே நெருக்கமாக பழக கூடியவர் நடிகை திரிஷா. விஜய் உடன் ஜோடி சேர்ந்து திரிஷா நடித்த கில்லி படம் த்ரிஷாவை மிக பெரிய அளவில் தூக்கி சென்றது.

இதன் பின்பு நடிகர் விஜய் உடன் ஜோடி சேர்ந்து திரிஷா நடித்து வந்த அதே காலகட்டத்தில் அஜித் உடனும் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். ஆனால் 2008ல் குருவி படத்திற்கு பின்பு சில காரணங்களால், திரிஷாவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை தவிர்த்து வந்தார் விஜய், இந்நிலையில் தொடர் தோல்வி படங்களால் மார்க்கெட் இழந்த திரிஷா மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை நிலைநிறுத்தி கொள்ள விஜய் மற்றும் அஜித் இருவருடைய படத்தில் நடிக்க இருவரின் உதவியை கேட்ட போது,

அதற்கான வாய்ப்பை விஜய் அப்போது கொடுக்கவில்லை, ஆனால் அஜித் மங்காத்தா படத்தில் வாய்ப்பை பெற்று தந்தார், இந்த படம் மிக பெரிய வெற்றியை பெற்று தந்தாலும், அடுத்தடுத்து திரிஷா நடித்த படம் தோல்வியை தழுவ அவரால் சினிமாவில் நிலைத்து நிற்க்க முடியவில்லை, இருந்தும் மீண்டும் தன்னுடைய சினிமா கேரியரை மீட்டெடுக்கு அஜித்தின் உதவியை நாடிய திரிஷாவுக்கு என்னை அறிந்தால் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தார் அஜித்.

இந்த படமும் வெற்றி பெற்றாலும் கூட த்ரிஷாவினால் இழந்த மார்க்கெட்டை மீட்டு எடுக்க முடியவில்லை, இந்நிலையில் சில காலம் சினிமாவில் மார்க்கெட் இழந்து வீட்டில் முடங்கி இருந்த திரிஷா மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார், இந்த நிலையில் அஜித் – விஜய் இருவருடன் ஒரே நேரத்தில் ஜோடி சேர்ந்து நடித்து டாப் ஒன் நடிகையாக வலம் வருவதற்கு திட்டமிட்ட திரிஷா.

விஜய் – அஜித் இருவரிடம் தனக்கு இருந்த நெருக்கமான பழக்கத்தை வைத்து அவர்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார்,இதில் விஜய் சிபாரிசில் தளபதி 67 படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் திரிஷா, ஆனால் அஜித் நடிக்கும் படத்தில் அஜித் சிபாரிசு செய்தும் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் வேண்டாம் என்று மறுத்து விட்டதால், அஜித் உடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு திரிஷாவுக்கு கை நழுவி போனது.

ஆனால் தற்பொழுது அஜித் நடிக்கும் புதிய படத்தில் விக்னேஷ் சிவன் பதில் வேறு ஒரு இயக்குனர் மாற்றப்பட்டு உள்ளதால், அஜித் நடிக்கும் புதிய படத்தில் அஜித் சிபாரிசில் திரிஷா நடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் மற்றும் விஜய் இருவரிடம் இருக்கும் தன்னுடைய நெருக்கமான பழக்கம் மூலம், ஒரே நேரத்தில் அஜித் மற்றும் விஜய் இருவரும் நடிக்கும் படத்தில் சவாரி செய்ய இருக்கும் திரிஷா மீண்டும் நம்பர் ஒன் நடிகையாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்கிறது சினிமா வட்டாரங்கள்.