நடிகர் விஜய் நடிப்பில். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் திரையில் வெளியாகி இருக்கும் கோட் திரைப்படம் ஏற்கனவே ட்ரைலர், டீசர் வெளியாகி ரசிங்கர்களை திருப்தி படுத்தவில்லை, குறிப்பாக யுவன் சங்கர் ராஜா ம்யூசிக் படம் வெளியாவதற்கு முன்பே அவுட்டாகி விட்டது. சரி மியூசிக் தான் போச்சு படமாவது நல்லா இருக்குமா என்று நம்பி போனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
கோட் படத்தின் மிகப்பெரிய தோய்வுக்கு முக்கிய காரணம் மூன்று மணி நேரம் ஜவ்வாக இந்த படத்தை இழுத்துக் கொண்டு சென்றது தான், இடையில் ஒரு மணி நேரம் இந்த படம் மிக மெதுவாக நகர்கிறது. அதாவது ஆரம்பத்தில் நல்ல விறுவிறுப்பாக சென்ற கோட் திரைப்படம் இடையில் சுமார் 50 நிமிடங்கள் வரை ரொம்ப ஸ்லோவாக வெங்கட் பிரபு இந்த படத்தை நகர்த்தி செல்வது படம் பார்க்கும் ரசிகர்களை பொறுமை இழக்க செய்கிறது.
அதாவது படம் ஆரம்பத்தில் நல்லா சென்று கொண்டிருக்கையில் இடையில் பாங்காங் செல்லும் காட்சி வந்த உடனே ரொம்ப மெதுவாக செல்கிறது. இடையில் அந்த 50 நிமிடங்களுக்கு படம் தோய்வாக இருந்தாலும், அதன் பின்பு படம் பிக்கப் ஆகி நல்ல கமர்சியலாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் படத்தில் மிகப் பெரிய நெகட்டிவாக அமைந்துள்ளது டிஜி ஒர்கிங் அதாவது பையனின் டிஐஜி செமையாக இருந்தது.
மற்றபடி படத்தின் பேக்ரவுண்ட் மிகவும் பெரிய அளவில் மொக்கையாகவே அமைந்துவிட்டது. அதாவது மிகப் பெரிய பட்ஜெட் மிகப்பெரிய நடிகர் படத்தில் இப்படி ஒரு மோசமான vfx என்பது படத்திற்கு மிகப்பெரிய தோல்வி ஏற்படுத்தியது. மேலும் படத்தில் பல கேரக்டர்கள் உள்ளே வருகிறது, குறிப்பாக ஒரு படத்தில் வில்லனை ரசிகர்கள் பார்க்கும் போதே ஒரு பீதி வரும். அந்த வகையில் இந்த படத்தில் நடிகர் மோகன் வில்லன் கதா பாரத்தை ஏற்று நடித்துள்ளார்.
ஆனால் அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகரா.? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. வில்லன் கேரக்டரில் மோகன் வரும் காட்சிகள் சிரிப்பைதான் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு வில்லன் மோகனை இந்த படத்தில் கொண்டு வந்தது ஏதோ மோகனை வைத்து காமெடி கிமடி செய்துவிட்டாரா வெங்கட் பிரபு என்பது தெரியவில்லை. பொதுவாக வெங்கட் பிரபு படம் என்றால் முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்.
அந்த வகையில் ரசிகர்கள் இந்த படம் மிகப்பெரிய அளவில் என்டர்டைன்மென்ட் செய்ததா என்று கேட்டால் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிற படம். இடையில் சுமார் ஒரு மணி நேரம் தியேட்டர் கதவை திறந்தால் போதும் என்கின்ற நிலைக்கு ரசிகர்கள் கதறுகிறார்கள். ஆனால் கடைசி சுமார் ஒரு மணி நேர காட்சிகள் வேற லெவலில் வெங்கட் பிரபு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
மொத்தத்தில் பொதுவான ரசிகர்கள் இந்த படத்திற்கு சென்றால் ஓவரால் என்ஜாய் செய்வது போல் இருக்கும். ஆனால் சினிமாவை உன்னிப்பாக கவனிக்க கூடிய ரசிகர்கள் சென்றால் பல இடங்களில் தோய்வு ஏற்படும். மேலும் படத்தில் இருக்கும் பல குறைகள் அவர்களுக்கு தென்படும். அந்த வகையில் கோட் திரைப்படத்தை நீங்களும் பார்த்து இருந்தீர்களா உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.