சுமார் 386 கோடி பட்ஜெட்டில் உருவாகிய கோட் படத்தின் வசூல் என்ன என்பது பற்றி தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் சம்பளம் இந்த படத்தில் 200 கோடி, மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஜெயம் ராம், பிரேம்ஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் ஒரு பாடலுக்கு நடிகை திரிஷா நடனமாடியுள்ளார்.
இதில் முக்கியமாக சிவகார்த்திகேயன் கேமியோவாக நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜயகாந்த் ஏ ஐ டெக்னாலஜி மூலம் இந்த திரைப்படத்தில் கொண்டு வந்தார்கள். மிகப்பெரிய ஒரு நடிகர் பட்டாளமே இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதால் இவர்களின் சம்பளமே பட்ஜெட்டில் பெரும் அளவு சென்று இருக்கும், அந்த வகையில் மிக குறிய செலவில்தான் இந்த படம் எடுக்கப்பட்டு திரைக்கு வந்திருக்கிறது.
இந்த நிலையில் படம் வெளியாகி முதல் நாளில் 126 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், அடுத்த நான்கு நாட்களில் மொத்தம் சுமார் 280 கோடி அளவில் இந்த படம் வசூலித்ததாக தகவல் வெளியாகிறது. படம் வெளியாகி சுமார் ஒன்பது நாட்கள் ஆன நிலையில் முதல் நான்கு நாட்கள் வசூலுக்கு பின்னர் இந்த படத்தின் அடுத்தடுத்து வசூல் என்ன என்பதை தெரிவிக்க பட குழுவினர் மறுத்து வருகிறார்கள்.
மேலும் இந்த படத்தின் அடுத்தடுத்த வசூல் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் பட குழுவினர் வெளியிடாமல் இருப்பதற்கு காரணமே, இந்த படம் ம முதலிழுக்க மோசமாகும் அளவிற்கு வெளியில் கௌரவமாக சொல்லக்கூடிய அளவில் வசூலிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.அந்த வகையில் கோட் திரைப்படம் தமிழ்நாட்டை தாண்டி மற்ற அனைத்து மாநிலங்களுமே மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவி இருக்கிறது.
தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த வசூலை கொடுக்கவில்லை. குறிப்பாக தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தெலுங்கு உரிமையை 16 கோடிக்கு வாங்கிய விநியோகஸ்தர்கள், கிட்டத்தட்ட 13 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் கேரளாவில் ரிலீஸ் ஆன முதல் நாட்டிலே இந்த படத்தை ஓரங்கட்டி விட்டனர் கேரளா ரசிகர்கள். அதேபோன்று அண்டை மாநிலமான கன்னடத்திலும் மிகப்பெரிய அளவில் வசூலில் ஜொலிக்கவில்லை. ஹிந்தியில் இந்த படத்தை பெரும்பாலும் திரையரங்குகள் வெளியிடவே முன்வராததால், சிறுசிறு திரையரங்கங்கள் மட்டுமே ஹிந்தியில் வெளியிட பட்டது. ஆனாலும் அங்கேயும் மிகப்பெரிய அளவில் வசூல் இல்லை.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும், அதுவும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து தமிழ்நாட்டில் பிற எந்த இடங்களிலும் பெரும் அளவு கோட் திரைப்படத்திற்கான வசூலை பெறவில்லை என்று தகவல் வெளியாகிறது. அந்த வகையில் பெரும்பாலான தமிழ்நாட்டில் வெளியிட்ட கோட் திரையரங்குகளில் காற்று வாங்குவதால், அதாவது மொத்தம் 10 பேர் கூட ஒரு சோவுக்கு வராததால் பல திரையரங்குகள் கரண் பில் காசு கூட தேறலையே என சில சொற்ப நபர்களை வைத்து வேறு வழி இன்றி திரையிட்டு வருவதாக தகவல் வருகிறது.
அந்த வகையில் கோட் படம் மொத்தத்தில் வசூல் மிகப்பெரிய அளவில் ஜொலிக்காதால் முதலுக்கே மோசம் ஆகும் வகையில் தற்பொழுது படத்தின் தயாரிப்பு குழு போட்ட முதலீடு கிடைத்தால் போதும் என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இதையும் மீறி ஓர் ரசிகர்களை ஏமாற்றுவதற்காக கோட் வெற்றி விழா கொண்டாடுவார்களா என்றால், இதற்கு முன்பு நடிகர் விஜய் நடித்த படங்கள் தோல்வியை தழுவும் பொழுது அந்த தயாரிப்பாளர்களிடம் அடுத்து உங்களுக்கு ஒரு படம் கால் சீட் தருகிறேன் என்று உறுதி அளிப்பார், ஆனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வர இருப்பதால் அடுத்து நடிக்கும் படம் தான் கடைசி படம் என்று அறிவித்து விட்டதால், தற்பொழுது தயாரிப்பு தரப்பிற்கு எந்த ஒரு உறுதியும் கொடுக்காத காரணத்தால் இந்த இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாடுவதில் தாமதம் ஏற்படுகிறது.