தமிழ்நாட்டில் ஓஹோ..! கேரளாவில் அய்யய்யோ..! கேரளாவில் மண்ணை கவ்விய கோட்..! கழுவி ஊத்தும் கேரள ரசிகர்கள்…

0
Follow on Google News

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் செப்டம்பர் 5ம் தியதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவான கோட் படம் பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிரூப்தியை பெற்றுள்ளது. முக்கியமாக தளபதியின் கோட்டையாக திகழும் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்களே படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர்.

நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து தியேட்டர்களில் வெளியாகியுள்ள தி கோட் படத்தில் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, ஜெயராம், வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நடித்துள்ளதைப் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

கோட் படம் தமிழ்நாட்டில் சோலோவாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என மொத்தம் 5 மொழிகளில் படம் ரிலீஸ் ஆன இப்படம் கிட்டத்த ரூபாய் 400 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார். படம் பார்த்த ரசிகர்களில் ஒரு பகுதியினர் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என கூறியுள்ளனர்.

படத்தின் கதைக்கு தேவையில்லாத காட்சிகள் படத்தில் அதிகம் உள்ளதாகவும் படம் முழுக்க சண்டைக் காட்சிகள்தான் உள்ளது. ஆனால் படத்தின் கதைக்கு அது தேவையில்லை. படக்குழுவினர் கொடுத்த ஹைப்புக்கு படம் worth இல்லை எனவும், ஒருமுறை இந்தப் படத்தைப் பார்க்கலாம். அதுவும் விஜய்க்காக பார்க்கலாம். சில காட்சிகள் படத்தின் கதையோட்டத்தில் இருந்து வெளியேறி, மீண்டும் கதைக்குள் வருகின்றது. இது படத்தில் போரடிக்கும் விஷயமாக உள்ளது.

சண்டைக் காட்சிகளை மட்டுமே வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளனர். ஆனால், படத்தின் கதை சுமாரான கதை என கேரளா விஜய் ரசிகர்களை கழுவி ஊற்றி வருகின்றனர். அதேபோல் மற்றொரு ரசிகர் கூறும்போது, மற்ற நடிகர்களின் ரசிகர்களை சந்தோஷப்படுத்த, பல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவையெல்லாம் படத்திற்கு தேவையில்லாத காட்சிகள்.

இப்படியான காட்சிகள் மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு வேண்டுமானால் திருப்தியாக இருக்கலாம், ஆனால் விஜய்க்கு இருக்கும் மாஸ்க்கு ஏற்ற காட்சிகள் படத்தில் இல்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார்.அதேபோல் ரசிகர்கள் சிலர் இந்த படத்தின் ஸ்பார்க் பாடல் தேவையில்லாத ஆணி என கலாய்த்து விமர்சித்துள்ளார். இது எல்லாம் போது என வெளிநாட்டில் படம் பார்த்த ரா புவன் என்ற ரசிகர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “அமெரிக்கா போய் VFX பண்ணோம்னு சொன்னாங்க… செம மொக்கையா இருக்கு. சிரிக்கிறாங்க சார் தியேட்டர்ல’ எனப் பதிவிட்டு வருந்தியுள்ளார்.

ஒருபுறம் ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடி வந்தாலும் விஜய் ரசிகர்கள் மத்தியிலேயே இந்தப் படத்திற்கு சுமாரான விமர்சனம் கிடைத்துள்ளது என்பது பலரையும் அப்செட் அடைய செய்துள்ளது. டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியான போதும் இதுபோன்ற நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.