கோட் திரைப்படம் முதல் பாதி பாட்டு ஃபைட் என வழக்கம் போல் சினிமாவாக சொல்கிறது, இரண்டாம் பாதியில் தான் கதை தொடங்குகிறது. ஆனால் கிளைமாக்ஸ் வருவதற்கு முன்பே இதுவாகத்தான் இருக்கும் என்று எளிதாக படம் பார்ப்பவர்களுக்கு புரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் எதற்கு இப்படி இந்த படத்தை ஜவ்வாக இழுக்க வேண்டும் என்று பார்ப்பவர்கள் தோற்றுகிறது.
அந்த வகையில் படத்தில் மிகப்பெரிய நெகட்டிவ் கதையில் மிகப்பெரிய சொதப்பல் தான். தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து புளித்து போன பல கதைகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதில் பட்டி டிங்கர் பண்ணி வெளியாகி உள்ளது தான் கோட் திரைப்படம். அதே மாதிரி திரைக்கதையில் மிகப்பெரிய லாஜிக் மிஸ்டேக் இருக்கு. அதனால் மிகப்பெரிய தோய்வு இந்த படத்தில் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இடைவேளைக்குப் பின்பு படம் பார்ப்பவர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு லாஜிக்கே இல்லாமல் செல்கிறது. ஜெயராம் தப்பித்து செல்லும் காட்சியை விஜய் விரட்டி பிடிப்பது போன்று, பைக்கிலே விரட்டி ட்ரெயின் உள்ளே பாய்ந்து பிடிக்கும் காட்சி ஏற்கனவே குருவி படத்தில் சுறா படத்தில் விஜய் நடித்த லாஜிக்கே இல்லாத காட்சி போன்று இதில் இடம் பெற்றுள்ளது.
மொத்தத்தில் இது போன்ற காட்சிகள் சின்ன பசங்க வீடியோ கேம் விளையாடுவது போன்று உள்ளது. நடிகர் மோகனை மிக பெரிய உலக தாதா போன்று, இந்த படத்தில் காட்டப்படுகிறார். ஆனால் நாலு சீனு 5 சீன் தான் வருகிறார். அதேபோன்று மோகனின் கெட்டப்பை பார்த்தால் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கிறத. அதாவது வில்லனை பார்த்தால் பயம் வேண்டும், ஆனால் இவரை பார்த்தால் பரிதாபம் தான் வருகிறது.
ஒரு காலத்தில் வெளிவிழா நாயகனாக இருந்த மோகனை டேமேஜ் செய்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். முழுக்க முழுக்க இந்த படம் ஒரு என்டர்டைன்மென்ட் படம் என்றால் உள்ளத்தை அளித்தால் போன்ற காமெடி படமாக இருந்தால், இந்த படத்தில் லாஜிக் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இது ஒரு ஆக்சன் படம் என்பதால் கொஞ்சமாவது படம் பார்ப்பவர்கள் லாஜிக் பார்ப்பார்கள்.
அந்த வகையில் முதல் பாதி பரவாயில்ல, ஆனால் இரண்டாம் பாதி திரையரங்கில் உட்காரவே முடியவில்லை, அந்த அளவிற்கு இந்த படம் ரொம்ப கேவலமாக உள்ளது. அதே நேரத்தில் A I மூலம் விஜயகாந்த் வருகிறார் என்று சொன்னார்கள், ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில், வடிவேலு காமெடி கட்சியில் வருவது போன்று வாமா மின்னல் என வந்துவிட்டு விஜயகாந்த சென்று விடுகிறார்.
இதற்கு தான் விஜயகாந்த் இந்த படத்தில் வருகிறார் வருகிறார் என பில்டப் கொடுத்தார்களா என கேட்க வருகிறது, அந்த வகையில் விஜயகாந்த் ரசிகர்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள், விஜயகாந்த் வரும் காட்சியை குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்களாவது இருந்திருக்க வேண்டும். மேலும் இந்த படத்தில் சர்ப்ரைஸ் என்று சொன்னார்கள் அப்படி ஒன்னும் இந்த படத்தில் பெருசா சப்ரைஸ் இல்லை, சர்ப்ரைஸ் என்று சொன்னதை நம்பி போனவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது, அந்த சர்ப்ரைஸ் தான் ஏமாற்றம். அந்த வகையில் இந்த படத்தில் ச சர்ப்ரைஸ் ஏமாற்றம்தான் என்பது படம் பார்த்தவர்கள் புரிந்து கொண்டார்கள்.