எதிர்பார்த்ததில் பாதி கூட வசூல் இல்லை… தலையில் துண்டை போடும் GOAT பட தயாரிப்பாளர்..

0
Follow on Google News

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் கோட், இந்த படம் வெளியாவதற்கு முன்பு ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது,வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தாவிற்கு பின்பு கோட் படம் அதைவிட பல மடங்கு பிளாக்பஸ்டர் அடிக்கும் என்று பலரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் படம் பார்த்தவர்களுக்கு இது வெங்கட் பிரபு படமா.? இல்லை விஜய் படமா என்கின்ற மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது. காரணம் இது முழுக்க முழுக்க வெங்கட் பிரபு படம் மாதிரியே இல்லை. அதே நேரத்தில் விஜய்க்கான படமாகவும் இல்லை. அந்த அளவுக்கு பல குளறுபடி இந்த படத்தில் இருந்தது. மொத்தத்தில் படத்தின் பிஜிஎம் மற்றும் இசை பெரும் அளவில் இந்த படத்தை சொதப்பி விட்டது என்றே சொல்லலாம்.

இதனாலேயே எந்த அளவுக்கு பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கோட் திரைப்படம் அதே பரபரப்புடன் மக்கள் மத்தியில் வரவேற்பே இல்லாமல் போனது. இந்த நிலையில் படத்தின் வசூல் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. கோட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டு இருந்தார். ஆனால் அடுத்தடுத்த நாட்கள் வசூலின் விவரத்தை வெளியிடாமல் சைலன்டாக அடங்கினார் அர்ச்சனா கல்பாத்தி.

இதற்கு காரணம் முதல் நாள் பொதுவாகவே படம் எப்படி இருக்கு என்று யாருக்கும் தெரியாது, அதனால் வழக்கம்போல் விஜய் படத்திற்கு கிடைத்த வசூல் போட் படத்திற்கு கிடைத்தது. இருந்தாலும் லியோ படத்திற்கு கிடைத்த முதல் நாள் வசூல் கோட் படத்திற்கு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து முதல் நாள் படம் வெளியான பின்பு படம் மொக்கை என்று தெரிந்ததும் அடுத்தடுத்த நாட்கள் ரசிகர்கள் குறைய தொடங்கினார்கள்.

இதனால் கோட் படத்தின் வசூல் கிடுகிடுவென குறைந்ததால் அடுத்தடுத்த நாட்கள் படத்தின் வசூலை அர்ச்சனா கல்பாத்தி வெளியிடவில்லை என்கிற ஒரு விமர்சனம் எழுந்துள்ளது. படம் வெளியாகி இரண்டு நாட்களில் இந்த படம் இழுத்து மூடிவிடும் என்று படம் வெளியான முதல் நாள் படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் 300 கோடி வசூலை எட்டுவது மிகப்பெரிய கடினம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை மேலும் தமிழ் சினிமாவில் வேற எந்த ஒரு படமும் வெளியாக காரணத்தினால் வேறு வழி இன்றி மக்கள் கோட் படத்தை திரையரங்குகளில் பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் நாலாவது நாள் தமிழ்நாட்டில் கோட் படத்தின் வசூல் 30 கோடியை எட்டியது ஹிந்தி மற்றும் தெலுங்கில் இந்தியில் 2 கோடியே 30 லட்சம் தெலுங்கில் ஒரு கோடியே 70 அச்சமும் கோட் திரைப்படம் வசூல் என பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் நாலாவது நாளில் 35 கோடிக்கு மேல் வசூல் ஆகின்றது அதற்கு காரணம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை தான் என கூறப்படுகிறது.

மேலும் கோட் திரைப்படத்தின் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் நான்கு நாள் முடிவில் 300 கோடிக்கு வரை வசூல் நடைபெற்றதாகவும் மேலும் வேறு எந்த ஒரு பெரிய படமும் வராத நிலையில் இப்படி திணறிக் கொண்டிருக்கும் கோர்ட் திரைப்படம், ஏதாவது மிகப்பெரிய படம் போட்டிக்கு ரிலீஸ் ஆயிருந்தால் இந்த வசூலை கூட பெற்று இருக்காது.

அந்த வகையில் கோர்ட் திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் வசூல் 500 கோடி எட்டுவதற்கு முக்கி கொண்டு இருக்கிறது அந்த வகையில் 500 கோடி வரை இந்த படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு 200 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆகையால் குறைந்தது 500 கோடி ஆவது இந்த படத்திற்கு வசூல் நடந்தால் தான் சேதாரம் இல்லாமல் தயாரிப்பாளர் தப்பிப்பார் இல்லை தலையில் துண்டை தான் போடா வேண்டும் என்கிற கருத்தும் உள்ளது.

Follow the Dinaseval News channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VanOPjW4dTnQ2Cguwm3y