கோட் படம் எப்படி இருக்கு … படத்தில் இருக்கும் மிக பெறிய ட்விஸ்ட் இது தான்… சுட சுட விமர்சனம் இதோ…

0
Follow on Google News

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜய் என் நடிப்பில் வெளியாகி இருக்கும் கோட் திரைப்படத்தின் கதை ரெம்ப சிம்பிள், நடிகர் விஜய் குடும்பத்துடன் வெளிநாடு செல்கிறார், அந்த இடத்தில் மிகப் பெரிய கலவரம் வெடித்து மகனை பிரிகிறார் விஜய். இதன் பின்பு மகனுடன் ஒன்று சேர்கிறார். இதற்கிடையில் என்னென்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் சுருக்கமான கதை.

இதற்குள் இந்த கதைக்குள் ஒரு நட்பு, ஒரு குடும்ப செண்டிமெண்ட் மற்றும் இந்தியாவின் புலனாய்வு அமைப்பாளர் ரா சம்பந்தமான கதையும் இதில் அடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து படத்தின் கிளைமாக்ஸில் நடைபெறும் கிரிக்கெட் காட்சிகள் வேற லெவல் கொண்டாட்டங்களை கொடுத்துள்ளது. ரசிகர்களுக்கு அந்த வகையில் மூன்று மணிநேரம் படத்தை செம ஜாலியாக கொண்டாடும் வகையில் வெங்கட் பிரபு அருமையாக தன்னுடைய படைப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் விஜய் இதில் ஒரு நெகட்டிவான கேரக்டரை ஏற்று பெரிய அளவில் தெறிக்கவிட்டு விட்டார் என்றே சொல்லலாம். படத்தில் ஆக்ஷன் செண்டிமெண்ட்க்கு எந்த விதத்திலும் குறை இல்லை, அதே நேரத்தில் படத்தில் ஒரு சஸ்பென்ஸ் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, அதை பார்க்கும் ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

கோட் படத்தின் முதல் பாதி நட்பு சென்டிமென்ட் என்று கலகலவென்று நகர்கிறது. இரண்டாம் பாதி அப்பா மகனுக்கான ஒரு விறுவிறுப்பான கதையாக நகர்கிறது. மொத்தத்தில் படத்தில் இருக்கும் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் சப்ரைஸ் அடுத்து என்ன அடுத்து என்ன என்கின்ற ஆர்வத்தை தூண்டும் விதத்தில் வெங்கட் பிரபு மிகப்பெரிய ட்விஸ்ட்டை வைத்துள்ளார்.

கோட் படத்தின் முதல் பாதி முடிந்து இரண்டாம் பாதி தொடக்கத்தில் தான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த படத்தில் வெங்கட் பிரபு வைக்கப்பட்ட சர்ப்ரைஸ் என்ன என்பது தெரிய வருகிறது. படத்தின் கிளைமாக்ஸ் இல் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் காட்சி மட்டுமே சுமார் 20 நிமிடம் வரை செல்கிறது. ஆனால் அந்த 20 நிமிடம் எப்படி போனது என்றே தெரியாத அளவிற்கு வேற லெவலில் வெங்கட் பிரபு தன்னுடைய மேஜிக்கை செய்துள்ளார்.

கிரிக்கெட் மைதானத்தில் சிஎஸ்கே மேட்ச் நடக்கிறது அந்த கிரிக்கெட் இடையில் இந்த படத்தின் கதைக்கான ஒரு நகர்வு அங்கே மிகச் சிறப்பாக வெங்கட் பிரபு கையாண்டு இருக்கிறார். இருந்தாலும் படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்து விட்டது என்று சொல்ல வேண்டும். என்னதான் யுவன் சங்கர் ராஜா கோட் படத்திற்கு இசையை அமைத்திருந்தாலும் கூட, சொல்லும் படியாக அவருடைய இசை இந்த படத்தில் ஜொலிக்கவில்லை.

இருந்தாலும் இடைவெளிக்குப் பின்பு யுவன் சங்கர் ராஜாவின் பிஜிஎம் ஓரளவு படத்தை நகர்த்தி கொண்டு சென்று விடுகிறது. சுமார் மூன்று மணி நேரம் படம் என்பதால் படத்தின் ஆங்காங்கே தோல்வி ஏற்பட்டாலும் கூட விஜய் மற்றும் பிரேம்ஜி இருவரின் காமெடிகள் அந்த தோய்வு சரி செய்கிறது. அந்த விதத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு, அஜித்க்கு எப்படி மங்காத்தா என்கிற ஒரு மிகப்பெரிய படமாக கொடுத்தாரோ அதேபோன்று விஜய்க்கு கோட் படத்தை கொடுத்து விட்டார். இந்த படத்தில் லாஜிக் மற்ற அனைத்தையும் ஒதுக்கி வைத்து பார்த்தால் 3 மணி நேரம் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திரையரங்குகளில் கோட் படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க மக்களே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here