ஒரு காலத்தில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற இயக்குனர் சங்கர், கடந்த சில வருடங்களாக அவர் வெளியாகும் படங்கள் அனைத்தும் பிரமாண்ட தோல்வியை சந்தித்து வருகிறது, அந்த வகையில் பிரமாண்ட இயக்குனராக ஒரு காலத்தில் வலம் வந்த சங்கர், தற்பொழுது பிரமாண்ட தோல்வி இயக்குனர் என்கிற பெயருக்கு சொந்தமாகிவிட்டார் சங்கர், அந்த அளவுக்கு அவர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற படங்கள் கேலி கிண்டலுக்கு உள்ளாகியாது.
இந்நிலையில் சங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் படம் ஐந்தரை மணி நேரம் ஓடும் அளவுக்கு காட்சிகளை எடுத்து அதை இரண்டரை மணி நேரமாக குறைத்தார் சங்கர், இதனாலே அந்த படத்திற்காக செலவு செய்த பல கோடிகள் சங்கரால் வீணடிக்கப்ட்டது. மேலும் 15 கோடி செலவு செய்து கேம் சேஞ்சர் படத்திற்காக எடுக்கப்பட்ட ‘லைரனா’ பாடல் அந்த படத்தில் இடம்பெறவில்லை.
இதெல்லாம் சங்கரால் வீணடிக்கப்பட்ட தயாரிப்பாளர் பணம், மேலும் ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளியான வந்த பல படங்களின் காட்சிகளை கேம் சேஞ்சர் படம் நினைவுப்படுத்துகிறது. படத்தில் 20 நிமிட பிளாஷ்பேக் காட்சியை தவிர படத்தில் பெரிதாக சொல்ரதுக்கு ஒன்றும் இல்லை. மொத்தத்தில் இந்த கருமத்தை தான் இத்தனை நாட்களாக ஒட்டுனியா என்று சங்கரை கேலி கிண்டல் செய்து வருகிறார்கள் கேம் சேஞ்சர் படத்தை பார்த்தவர்கள்.
இந்நிலையில் ஒரு பிரமாண்ட படம் வெளியான முதல் நாள் அந்தப் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தான் அதன் வசூல் நிலவரம் ஏறுமா இறங்குமா என்பதை கணிக்க முடியும். அந்த வகையில், ஷங்கரின் திரைப்படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஓவர் ஹைப் கொடுத்திருந்த நிலையில், படம் வெளியான முதல் நாளே மக்கள் மத்தியில் பெரிதான வரவேற்பு இல்லை.
இதற்க்கு முக்கிய காரணம் சங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 மிக பெரிய தோல்வியை தழுவியது தன. இந்நிலையில் கேம் சேஞ்சர் ரிலீசான முதல் நாள் மதியத்திற்கு மேலே, பெரும்பாலான தியேட்டர்கள் காற்று வாங்க தொடங்கியது. படம் வெளியாகி 5 நாட்களில் கேம் சேஞ்சர் இந்தியாவில் 106.15 கோடியையும், 6வது நாளான நேற்று இப்படம் 6.50 கோடியும் வசூல் செய்திருக்கிறது.
இந்நிலையில் தற்பொழுது கேம் சேஞ்சர் 186 கோடி ரூபாய் வசூலில் இந்தியாவில் மட்டும் கேம் சேஞ்சர் திரைப்படம் ரூ.110 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் அதிகபட்சமாக தெலங்கில் ரூ.65 கோடியும் இந்தியில் ரூ.30 கோடியும் தமிழ்நாட்டில் ரூ.10 கோடியும் இப்படம் வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் 450 கோடி என சொல்லப்படுகிறது. ஆனால், இப்படியே போனால் அதிகபட்சம் இப்படம் 200 கோடியை வசூல் செய்து ஒரு தோல்விப்படமாகவே அமைய வாய்ப்பிருக்கிறது.
இத்தனைக்கும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை காலகட்டத்தில் வெளியாகியும். இப்படத்திற்கு பெரிய வசூல் இல்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் – சந்தானம் நடித்து வெளியாகியுள்ள மத கஜ ராஜா படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. அதே போன்று பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் படமும் நல்ல வசூலை பெற்று வரும் நிலையில் சங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் ஐசியூவில் தீவிர சிகிச்சையில் இருப்பது என்னடா இது பிரமாண்ட இயக்குனர் சங்கருக்கு வந்த சோதனை என பலரும் பரிதாபபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.