ஓவர் அட்ராசிட்டி… பெண் ஓட்டுநர் சர்மிளாவுக்கு விழுந்த ஆப்பு… ஓவர் ஆட்டம் போட்ட இனி இப்படி தான்..

0
Follow on Google News

கோவையில் பெண் பேருந்து ஓட்டுநராக ஷர்மிளா மிக குறுகிய காலத்தில் சமூக வலைத்தளம் மூலம் மிக பிரபலமாக அறியப்பட்டவர், இதற்கு முன்பு தமிழகத்தில் பெண் பேருந்து ஓட்டுநராக, அம்புலன்ஸ் ஓட்டுநராக பல பெண்கள் சத்தமே இல்லாமல் சாதனை படைத்து இருந்தாலும், அவர்கள் யாரும் பிரபலமாக அறியப்படாமல் இருந்ததற்கு காரணம், அவர்கள் யாரும் மீடியா வெளிச்சத்திற்கு வரவில்லை.

இந்நிலையில் கோவையை சேர்ந்த பெண் டிரைவர் ஷர்மிளா அவருடைய வீடியோக்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்ததால் மீடியாவின் வெளிச்சத்திற்கு வந்து பிரபலமாக அறியப்பட்டார், மேலும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் பயணம் செய்து,அது செய்தியாக வெளியானதை தொடர்ந்து மேலும் பெண் டிரைவர் ஷர்மிளாவை பிரபலப்படுத்தியது.

இந்நிலையில் ஷர்மிளா ஓட்டிய பேருந்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பயணம் செய்த போது அந்த பேருந்தில் பெண் நடத்துனர் எம்பி கனிமொழியிடம் டிக்கெட் கேட்டதால், பெண் டிரைவர் ஷர்மிளா மற்றும் பெண் நடத்துனர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த பெண் டிரைவர் வேலையை விட்டு அவரே விலகியதாக பேருந்து நிர்வாகம் தரப்பு தெரிவித்தது, ஆனால் என்னை வேலையை விட்டு தூக்கிவிட்டார் பேருந்து முதலாளி என அனுதாபம் தேட முயற்சித்தார் சர்மிளா.

இருந்தும் பேருந்து நிர்வாகம் தரப்பு நடந்ததை போட்டுடைத்து சர்மிளா ஒரு விளம்பர பிரியர் என்பதை அம்பலப்படுத்தியது. இந்நிலையில் தற்பொழுது கார் ஓட்டுநராக இருக்கும் சர்மிளா, கோவையில் சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி பணி செய்து கொண்டிருக்கும் வீடியோவை, அவருடைய கார் உள்ளே இருந்து கொண்டு எடுத்து தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்த ஷர்மிளா.

அந்த வீடியோவில் பணி செய்து கொண்டிருக்கும் அந்த பெண் போலீஸ் அதிகாரி வாகனங்களை வழிமறித்து கைநீட்டி பணம் வாங்குவதாக தெரிவித்த சர்மிளா, மேலும் வாகன ஓட்டியை கெட்ட வார்த்தையில் பேசியதாகவும், அந்த பெண் போலீசார் மீது குற்றச்சாட்டுகளை வீடியோவில் அடுக்கிய ஷர்மிளா , இந்த காவல் பெண் காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் உயர் அதிகாரியால் மட்டும்தான் முடியும்.

அந்த வகையில் இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து மேல் அதிகாரி கவனத்திற்கு வரைக்கும் செல்லும் என்று ஆனா அந்த வீடியோவில் பதிவு செய்திருப்பார். ஆனால் சர்மிளா வெளியிட்டுள்ள வீடியோவில் இடம் பெற்றுள்ள அந்த பெண் போக்குவரத்து போலீஸ் அதிகாரி, சர்மிளா சொல்வது போன்று யாரிடமும் பணம் வாங்குவது போன்றோ, எந்த ஒரு ஓட்டுனரையும் கெட்ட வார்த்தையில் திட்டுவது போன்று இல்லை, அவர் ட்ராபிக்கை கிளியர் செய்யும் வகையில் அவருடைய கடமையை செய்வது போன்று தான் உள்ளது.

இந்நிலையில் கோவையில் கடந்த இரண்டாம் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்து போது அவ்வழியாக காரில் வந்த சர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை கேட்டபோது வீடியோ எடுத்து சர்மிளா அவரது “Instagram” பக்கத்தில் தவறான தகவல்களை கொண்டு பதிவிட்டதாக போக்குவரத்துக்கு போலீஸ் அதிகாரி ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் IPC 506(i), 509, 66C ஐடி சட்டத்தின் இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் கடமையை சிறப்பாக செய்து கொண்டிருந்த ஒரு பெண் போலீஸ் அதிகாரியை ஆதாரமில்லாமல் குற்றசாட்டுகளை தெரிவித்து வீடியோ வெளியிட்ட சர்மிளா, அவர் தெரிவித்த குற்றசாட்டு உண்மை என்றால் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும், இல்லை என்றால் சர்மிளா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்போது தான் விளம்பரத்துக்காக பொய்யான வீடியோக்களை வெளியிட மாட்டார்கள் என மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.