தத்தெடுத்த இரண்டு குழந்தைகள்.. ஏற்கனவே திருமணமான மனைவி.. ராஜமௌலியின் விசித்திரமான வாழ்கை..

0
Follow on Google News

இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர்களில் ராஜமௌலியும் ஒருவர். இதுவரை இவர் இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஒரு படம் கூட தோல்வி அடைந்ததில்லை. அந்த அளவிற்கு ஃபிலிம் மேக்கிங் இல் திறமை வாய்ந்தவர். டைட்டானிக், அவதார் போன்ற உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் அவர்களே, ராஜமவுலியின் டைரக்ஷன் பற்றி பாராட்டியிருக்கிறார் என்றால் பாருங்களேன்.

ஆம், சமீபத்தில் netflix தளத்தில் வெளியான Modern Masters:SS RAJAMOULI என்ற டாக்குமென்ட்ரி படத்தில் ராஜமவுளியின் குடும்பத்தினர் மற்றும் அவரது பிரபல நண்பர்கள் அவரது ஆரம்ப கால வாழ்க்கை பற்றியும், அவரின் பிரம்மாண்ட படைப்புகள் பற்றியும் சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளனர்.அந்த டாக்குமென்டரி படத்தில், ராஜமௌலியின் மனைவி மற்றும் பிள்ளைகள் பற்றிய பல்வேறு தகவல்கள் விளக்கப்பட்டிருக்கிறது.

எந்திரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலக அரங்கத்தில் எடுத்துச் சென்றவர் இயக்குனர் சங்கர். அவரைப் போலவே, தனது பிரம்மாண்டமான படங்கள் மூலம் தெலுங்கு சினிமாவை உலகளவில் கொண்டு சென்றிருப்பவர் ராஜமவுலி. அவர் இயக்கத்தில் உருவான மாவீரன், நான் ஈ, பாகுபலி 1,பாகுபலி 2, RRR என ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்புகள் அனைத்தும் உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்த திரைப்படங்கள்.

ராஜமவுலியை திறமையான இயக்குனராகம் தயாரிப்பாளராகவும் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பலருக்கும் பெரிதாக தெரிந்திருக்காது. ராஜமவுலி படங்கள் தன்னுடைய படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக வேலை பார்த்த பெண்ணை தீவிரமாக காதலித்து மணமுடித்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம் ராஜமவுலி காஸ்ட்யூம் டிசைனர் ரமா என்பவரை தீவிரமாக காதலித்திருக்கிறார்.

மேலும் தனது காதலை பலமுறை ரமாவிடம் கூறியிருக்கிறார். ஆனால் ரமா அவரது காதலை முதலில் ஏற்றுக்கொள்ளவில்லையாம். ஏனெனில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஏற்பட்டது மட்டும் இன்றி, ஒரு மகனும் இருந்தார். இந்த காரணத்தாலேயே ரமா ராஜமௌலியின் ப்ரொபோசலை ஏற்றுக் கொள்ளவில்லையாம். இருப்பினும், ராஜமவுலி தொடர்ந்து தன் காதல் அம்புகளை வீசி இருக்கிறார்.

ஒருவழியாக 2001 ஆம் ஆண்டு ராஜமவுலி ரமா தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. அவர்களின் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கை பற்றி அந்த டாக்குமென்டரி படத்தில் இருவரும் பகிர்ந்துள்ளனர்.ரமாவுக்கும் அவரது முன்னாள் கணவருக்கும் பிறந்தவர் தான் கார்த்திகேயா. ராஜமவுலி கார்த்திகேயவை தனது சொந்த மகனைப் போலவே தத்தெடுத்து வளர்த்திருக்கிறார்.

மேலும் கார்த்திகேயன் சிறுவயதிலிருந்தே ராஜமௌலியின் படங்களில் லைன் ப்ரொடியூசர் ஆக இருக்கிறார். அதுமட்டுமின்றி மயூகா என்ற பெண் குழந்தையும் இந்த தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்திருக்கின்றனர்.பிரபல இசையமைப்பாளர் கீரவாணி தான் ராஜமவுளியின் மைத்துனர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.RRR படத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்து கோல்டன் குளோப் விருது மற்றும் ஆஸ்கார் விருது போன்ற உயரிய விருதுகளை வென்றவர் கீரவாணி.

இப்படி ராஜமவுளின் ஒட்டுமொத்த குடும்பமே சினிமாவில் பணியாற்றி வருகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் ராஜமௌலிக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. தனக்கு பகவான் ஸ்ரீ ராமரை விட ராவணன் தான் பிடிக்கும் என்று ராஜமவுலி கூறியுள்ளார். கடவுள் கதாபாத்திரங்களை வைத்து பிரம்மாண்டமாக படங்களை எடுத்து வரும் ராஜமௌலிக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்வது எவ்வளவு வியப்பாக இருக்கிறது.