இசைஞானி இளையராஜா சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து சட்டமேதை அம்பேத்கார் உடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது, மேலும் இசை புயல் ஏ.ஆர். ரகுமான் தலைவிரி கோலத்துடன் ஆக்ரோஷமாக ஒரு பெண் புகைப்படத்தை வெளியிட்டு தமிழணங்கு என்று அவருடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டது. இது தமிழ் தாயை அவமதிக்கும் செயல் என பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல சினிமா நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பேசுகையில், அப்போது பிரதமர் மோடி குறித்து இளையராஜா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது குறித்து கேள்வி எழுப்பபட்டது, அதற்கு இளையராஜா தெரிவித்த கருத்தில் எந்த ஒரு தவறும் இல்லை, அவர் உண்மையை தான் பேசியுள்ளார். பல கோடி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள இளையராஜாவுக்கு எம்பி பதவி என்பதும் சாதாரணம்.
அதனால், உயரிய விருதுக்காக, அல்லது எம்பி பதவிக்காக பிரதமர் மோடியை புகழ்ந்து இளையராஜா பேச வேண்டிய அவசியம் அவருக்கு கிடையாது. அவருடைய தம்பி கங்கை அமரன் தான் பாஜகவில் இருக்கிறார், இளையராஜா பாஜகவில் இல்லை என தெரிவித்த பயில்வான் ரங்கநாதன், ஒரு காலத்தில் இந்தி பாடல்கள் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்று வந்த சூழலில் அதை தடுத்து நிறுத்தும் வகையில் தனது இசையால் இந்தி பாடலை கேட்டுக்கொண்டிருந்தவர்களை தமிழ் பாடல்களை கேட்க வைத்தவர் என தெரிவித்தார்.
மேலும், மறைந்த பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் ஒரு பேட்டியில், விபூதி , குங்குமம் அணிந்து ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவுக்கு சென்ற போது, அங்கே கையில் காப்பு கட்ட கூடாது, விபூதி , குங்குமம் வைத்து வரக்கூடாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது என கேள்வி எழுப்பிய போது, அப்படி நடந்திருந்தால் ஏ.ஆர். ரகுமானுக்கு என்னுடைய கண்டனம் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து உயிருடன் இருக்கும் போதே பிறைசூடன் பேசியுள்ளார்.
தமிழ்த் திரைப்பட பாடலாசிரியராகவும் கவிஞராகவும் தமிழ் மொழி அறிஞராகவும் பல முக்கியமான பங்களிப்புகளை தமிழ்ச் சமூகத்துக்கு தன் வரிகள் மூலம் உணர்த்திய கவிஞர் பிறைசூடன், உடல்நலக்குறைவால் கடந்த வருடம் இயற்கை மரணம் அடைந்தார் .ஏ ஆர் ரகுமான் தயார் பற்றி பிறைசூடன் பேசிய பழைய வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது, அதில் ஒரு பொது நிகழ்ச்சியில் ஏர் ஆர் ரஹ்மானை சந்தித்த போது மறுநாள் ஒரு பாடல் எழுதுவதற்காக என்னை அழைத்தார்.
மறுநாள் சென்ற போது, அங்கே அவரின் தாய் என்னிடம் விபூதி, குங்குமம் எல்லாம் இங்கே வைக்க கூடாதுனு சொன்னாங்க. ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. நான் பிறந்ததிலிருந்தே வச்சிக்கிட்டு இருக்கேன். உடன்பாடில்லை. யாருக்காகவும் வேஷம் போட விரும்பவில்லை, பின் உள்ளே சென்று ஏ ஆர் ரகுமானை சந்தித்தேன் அவர் பல்லவியை சொன்னார் நான் ரசிகா ரசிகா என பாடல் வரிகளை அவருக்கு தந்தேன் என்று பிறைசூடன் அந்த வீடியோவில் பேசியிருந்தார்.