கரகாட்டக்காரன் கனகா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?: தனது ஆசையை ரசிகர்களுக்கு தெரிவித்த கனகா.

0
Follow on Google News

90-களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை கனகா. ராமராஜன் நடிப்பில் வெளிவந்த ‘கரகாட்டகாரன்’ படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து அப்போதைய முன்னணி நடிகர்களான ரஜினி, விஜயகாந்த், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

பல வருடங்களாக சினிமா பக்கமும், மீடியா பக்கமும் தலைகாட்டாமல் இருந்த கனகா, தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில், “நான் நடிப்பை விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது எல்லாமே மாறிவிட்டது. இந்த சூழலுக்கு நான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும், நம்பிக்கையும் இருக்கிறது.

இந்த வயசுல இவளுக்கு இவ்வளவு பெரிய ஆசையா? என்று பலரும் கேட்பார்கள். இப்போது நடிக்க அழைத்தால், மேக்கப், நடிப்பு, டிரெஸ், எப்படி பேசணும் என எல்லா விஷயத்திலும் இப்போது இருக்கிற மாதிரி கற்றுக் கொள்ளவேண்டும். இதைப்பற்றி உங்களிடம் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு சகமாணவியாக உங்களோடு சேர்ந்து நான் கற்றுக்கொள்ளப் போகிறேன்.

உங்களுடைய கருத்தையும் எனக்கு சொல்லுங்கள். நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். கனகாவின் இந்த உருக்கமான பேச்சு தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அவரது பேச்சைக் கேட்ட பலரும், மீண்டும் நடிக்க வாங்க என்று கமெண்டுகள் போட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், இன்னமும் ஒருசிலர் கனகாவின் ரசிகர்களாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.