இளையராஜா உடன் கருத்து ஏற்பாடு ஏற்பட்டு ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்த்த பாடலாசிரியர் வைரமுத்து உடன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து க்ருபா கெ, சில்வர்ஸ்கிரீன் இந்தியாவில் வெளிவந்ததை பின்னணி பாடகி சின்மயி சுட்டிக்காட்டியுள்ளார் அதில், 1992 ஆம் ஆண்டு முதல், அதாவது அகடாமி விருதாளர் ஏ.ஆர் ரஹ்மானின் முதல் படமான ரோஜா-வில் இருந்து வைரமுத்து அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த இருவருக்கும் இடையேகூட சுமுகமான பயணம் இல்லை.
20 ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்த ஒரு சம்பவம். வைரமுத்து மேடைக்கு வந்து, “ரஹ்மான் அவர்கள் ‘மங்கச்செய்யும் தாளங்களை’ சற்று நீக்குவதன் மூலம் எனது வரிகளுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்றார். பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த ரஹ்மான் ஒரு தெய்வீக புன்னகையுடன் கவிஞரைப் பார்த்து தலையசைத்தார்.
ஆனால் அடுத்த நாளே, தனது பஞ்சதன் இல்லத்திற்குள் (ரஹ்மானின் சொந்த ரிக்கார்டிங் ஸ்டுடியோ) வைரமுத்தை அனுமதிக்க வேண்டாம் என்று தன் வேலையாட்களுக்கு கட்டளையிட்டார். இந்த எதிர்வினையால் அதிர்ந்த வைரமுத்து, தனிப்பட நேரிலும் பொது நண்பர்கள் மூலமாகவும் தொடர்ச்சியாக சமாதான தூதுகளை அனுப்பினார். ஆனால் ரஹ்மான் எதற்கும் அசையவில்லை.
வருத்தமடைந்த ரஹ்மான் வளர்ந்து வரும் இளம் பாடலாசிரியரான இளையகம்பனைப் பயன்படுத்துமாறு தன்னுடைய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. வைரமுத்தும் சளைத்தவரல்ல. கீபோர்ட் வாசித்துக்கொண்டிருந்த ஜெயராஜை ஓரிரு படங்களுக்கு இசையமைக்க வைத்து தன் எதிர்ப்பைக் காட்டினார். இரண்டாண்டுகள் பிரிவுக்குப் பின் மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் வைரமுத்து இம்மூவரின் மாபெரும் வெற்றிக்கூட்டணி மீண்டும் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒன்றிணைந்தது.
இக்கூட்டணி தனது 28 வது ஆண்டை நோக்கி முன்னேறிக்கொன்டிருந்தது. மணிரத்னத்தின் காவிய படைப்பான பொன்னியின் செல்வன் படம் வரை தொடர்ந்து இந்தக் கூட்டணியும் ஒரு முடிவுக்கு வந்தது.
இந்த முடிவின் தொடக்கம் 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் நிகழத் துவங்கியது என சில்வர்ஸ்கிரீன் இந்தியாவில் வெளிவந்த செய்தியை சுட்டிக்காட்டியுள்ளார் பின்னணி பாடகி சின்மயி.