பின் வாசல் வழியே ஓட்டம் எடுத்த ஷங்கர்… கிழிந்தது ஷங்கரின் அயோக்கியத்தனம்..! என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் ஷங்கர் பிரமாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர். அதிக செலவில் மிக பிரமாண்டமாக படம் எடுக்க கூடியவர் இயக்குனர் ஷங்கர். தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு எடுத்து சென்றவர் என்கிற பெருமையும் ஷங்கருக்கு உண்டு. ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படம் தவிர்த்து மற்ற அணைத்து படங்களும் பாடல் மற்றும் சண்டை காட்சிகள் மட்டுமே அதிக செலவு செய்து எடுக்கப்பட்டிருக்கும். மற்ற காட்சிகள் சராசரி படங்கள் போன்று இருக்கும்.

தனது சினிமா வாயிலாக, லஞ்சம் வாங்குவது தவறு என்பதை இந்தியன் படம் மூலம் வெளிப்படுத்தியிருப்பார். ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக முதல்வன் படம், கருப்பு பணம் குறித்து சிவாஜி படம். தொடர்ந்து தேச நலன் கருதியே அவருடைய பெரும்பாலான படங்கள் இருக்கும். இப்படி யோக்கியன் போன்று படம் எடுக்கும் இயக்குனர் ஷங்கர் தனது நிஜ வாழ்வில் அதை கடைப்பிடிக்கவில்லை என்பது சமீப காலமாக அவரை பற்றிய செய்திகள் உணர்த்துகிறது.

எந்திரன் 2.0 படத்தில், பிரமாண்டமாக செட் அமைப்பதில், செட் அமைக்கும் காண்ட்ராக்டரிடன் கமிஷன், துணை நடிகர்களை அழைத்து வருவரிடம் கமிஷன் எப்படி தயாரிப்பாளருக்கு தெரியாமல் கமிஷன் வாங்கி வந்த ஷங்கர். கமிஷன் கிடைக்கும் என்பதற்காகவே அதிகமான துணை நடிகர்களை அவருடைய படங்களில் பயன்படுத்தி வந்ததாக சினிமா துறையை சேர்ந்தவர்கள் பகீர் தகவலை தெரிவிக்கின்ற்றனர்.

சமீப காலமாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் இயக்குனர் ஷங்கர், அவருக்கும் லைக்கா நிறுவனத்துக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியன் 2 படம் பாதியிலே நிற்கிறது. அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான எந்திரன் 2.0 மிக பெரிய நஷ்டத்தை அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்படுத்தியது. இதனால் அடுத்து ஷங்கர் இயக்கத்தில் படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர்.

இந்நிலையில் தற்பொழுது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வரும் ஷங்கர் மூத்த மகள் திருமண வாழ்க்கையில் பெரும் பிரச்சனையை சந்தித்து குடும்ப பிரச்சனை ஒரு பக்கம் இருக்க. வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணப்பரிவர்த்தனை செய்ததாக இயக்குனர் ஷங்கருக்கு அமலாக்கத்துறை துறை நோட்டிஸ் அனுப்பியதை தொடர்ந்து. விசாரணைக்கு சமீபத்தில் ஆஜரானார் இயக்குனர் ஷங்கர்.

ஷங்கர் ஆஜரான தகவல் அறிந்த பத்திரிகையாளர்கள், அமலாக்க துறை அலுவலகத்தின் முன்பு குவிந்தனர். சுமார் இரண்டு மணிநேரம் நடந்த விசாரணைக்கு பின்பு வெளியான ஷங்கர், வெளியில் பத்திரிகையாளர்கள் இருப்பதை பார்த்துவிட்டு அமலாக்க துறை அலுவக பின் வாசல் வழியாக யாருக்கும் தெரியாமல் ஓட்டம் எடுத்தார். இந்நிலையில் ஷங்கர் எந்த தவறும் செய்யவில்லை என்றால் தைரியமாக பத்திரிகையாளர்களை சந்திக்கலாம்.

மேலும் சினிமாவில் லஞ்சம் வாங்குவது தவறு, கருப்பு பணம் வைத்திருப்பது தவறு, பிறருக்கு உதவி செய்யவேண்டும், சட்டத்தை மதிக்க வேண்டும், விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என யோக்கியன் போன்று படம் இயக்கம் சங்கர் அமலாக்க துறை விசாரணையை முடித்துவிட்டு பின் வாசல் வழியாக ஓடியது அவருடைய முகத்திரை கிழிந்துவிடும் என்கிற அச்சம் தான் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் உடன் இரவில் அனிருத் அடித்த லூட்டி… வெளியானது பரபரப்பு..என்ன நடந்தது தெரியுமா.?