விக்னேஷ் சிவன் தாலி கட்டிய நேரம்… அடி மேல் அடி வாங்கும் நயன்தார… இப்ப வெள்ளம் வந்து வெச்ச ஆப்பு..

0
Follow on Google News

நயன்தாரா நடிப்பில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியான இந்த படம், நயன்தாரா எதிர்பார்த்த வெற்றியை கொடுக்குமா இல்லை தலைக்குப்புற கவிழ்த்து விடுமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.தமிழ் சினிமாவை பொறுத்தவரை முன்னணி ஹீரோக்களின் படங்கள் 200 கோடி 300 கோடி என வசூலைக் குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஹீரோயின்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் அவ்வப்போது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றாலும் சில படங்கள் எதிர்பார்த்த வசூலை எடுக்காமல் தோல்வியடைந்து விடும்.

ஆனால் நடிகை நயன்தாரா இதுவரை நடித்த ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளது. அறம், கோலமாவு கோகிலா, நெற்றிக்கண் என இவர் நடித்த ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதே போல் அன்னபூரணி படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எண்ணிய நயன்தாரா இப்படத்தில் சமையல் கலைஞராக நடித்துள்ளார்.

டிசம்பர் 1ஆம் தேதி வெளியான அன்னபூரணி படத்தின் முதல் நாள் வசூல் 80 லட்சம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் விடுமுறை நாட்களில் எதிர்பார்த்த வசூலை எட்டி விடலாம் என்று எண்ணிய பட குழுவினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆம், வாங்க கடலில் உருவான மிக்சாம் புயலின் விளைவாக, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் இரண்டு நாட்களாக இடைவிடாத கனமழை கொட்டி தீர்த்தது.

மேலும் மோசமான வானிலை காரணமாக மக்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது.
இரவு பகல் என இடைவிடாது வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டு, உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் இன்றி மக்கள் தவித்து வந்தனர். இவ்வாறு அன்னபூரணி படத்திற்கு எதிராக மழை மற்றும் வெள்ளம் சதி பண்ணிவிட்டது. இதனால் பட குழுவினர் எதிர்பார்த்த வசூலையும் குவிக்க முடியவில்லை.

பொதுவாக ஒரு படத்தின் வெற்றி தோல்வியை அது வெளியான முதல் வாரத்திலேயே தீர்மானித்து விடலாம். அந்த வகையில் அன்னபூரணி படம் முதல் மூன்று நாட்களில் இரண்டு கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. அதைத்தொடர்ந்து மழை வெள்ளம் ஏற்பட்டதால், படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும் என்பதால், இனியும் அன்னபூரணி வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

சொல்லப்போனால் இந்த படத்திற்கு நயன்தாரா மட்டுமே ஏழு, எட்டு கோடி சம்பளம் வாங்கி இருப்பார். ஆனால் படம் இதுவரை இரண்டு கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதனால் பட குழுவினரும் தயாரிப்பு நிறுவனமும் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் திணறி வருகின்றன. அன்னபூரணி படத்தை வைத்து தப்பு கணக்கு போட்ட நயன்தாராவும் தற்போது விக்னேஷ் சிவனுடன் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பு சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தாலி கட்டிய பின்பு அவருடைய நடிப்பில் வெளியான படங்கள் தோல்வி சந்தித்து அடிமேல் அடி வாங்கி கொண்டிருக்கிறார் நயன்தாரா.