நடிகர் அஜித் துணிவு படத்தின் படப்பிடிப்பு ஆரம்பக்கட்டத்திலே, தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் விக்னேஷ் இவனுக்கு அளித்தார்,இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பது உறுதி செய்யப்பட்டது, மேலும் புதிய படத்திற்கான திரைக்கதை மற்றும் ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்த விக்னேஷ் சிவன். அந்த படத்திற்கான லொகேஷன் தேர்வையும் செய்து முடித்தார்.
மேலும் அஜித் நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கான அனைத்து நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் கால் சீட்டும் பெற்றார் விக்னேஷ் சிவன். இதே நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவனை நேரில் அழைத்த அஜித், மீண்டும் ஒருமுறை முழு கதையும் கேட்டு எனக்கு கதை பிடிக்கவில்லை, இதில் என்னால் நடிக்க முடியாது என மறுத்து விட்டார் அஜித்.
![](https://dinaseval.com/wp-content/uploads/2025/02/actor-ajithkumar-viknesh-sivan-1024x576.jpg)
படத்தில் கமிட்டாவதற்கு முன்பே கதையை கேட்டுவிட்டு தான் விக்னேஷ் சிவனை ஓகே செய்துள்ளார் அஜித், ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் இந்த நேரத்தில் அஜித் படம் பிடிக்கவில்லை என்று ஒரே போடாக போட்டவுடன் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக இந்த படத்திற்காக உழைத்த விக்னேஷ் சிவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றுள்ளார். மேலும் அஜித்தை எவ்வளவோ கன்வின்ஸ் செய்ய விக்னேஷ் சிவன் முயற்சித்தும் அதற்கு அஜித் உடன்படவில்லை.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் பதில் அஜித் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்தது, இதனை தொடர்ந்து விடாமுயற்சி படம் பல சிக்கல்களை தாண்டி எடுக்கப்பட்டு பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் ரிலீஸ் ஆனது, ஆனால் படம் ஆகா..ஓகோ என்றும் சொல்ல முடியாது, ரெம்ப மோசம் என்றும் சொல்ல முடியாது, அந்த அளவுக்கு சுமாராக பார்க்கும் படி அமைத்துள்ளது விடாமுயற்சி படம்.
இந்நிலையில் விடாமுயற்சி படம் வெளியானதை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகின்றது. ‘விடாமுயற்சி’ ரிலீஸாகியிருக்கும் நாளில் ‘சில நேரங்களில் இந்த விஷயங்கள் எப்படி நடக்கும் என நீங்கள் கவலைப்படுவதை நிறுத்தும்போது அற்புதம் நிகழும்’ என விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இருந்தார், இது விடாமுயற்சி படத்தை விக்னேஷ் சிவன் ட்ரோல் செய்வது போன்று உள்ளது என அஜித் ரசிகர்கள் விக்னேஷ் சிவனை ரவுண்டு கட்டி வெளுக்க தொடங்கினார்கள்.
மேலும் அஜித் மீது உள்ள வன்மம் தான் விக்னேஷ் சிவனின் இந்த பதிவு என்றெல்லாம் பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில், அஜித் ரசிகர்களின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் விடாமுயற்சி படத்தை பாராட்டும் வகையில்விக்னேஷ் சிவன் அடுத்த ஒரு பதிவு செய்துள்ளார் அதில்,
விடாமுயற்சி திரைப்படம் இன்டென்ஸான த்ரில்லர் படமாக உள்ளது. புதிர்களை சால்வ் பண்ணும் விதமாக ஏகப்பட்ட ட்விஸ்டுகளையும் திருப்பங்களையும் வைத்து இயக்குநர் மகிழ் திருமேனி கொடுத்துள்ளார். அஜித் குமாரின் பிரெசன்ஸ் படம் முழுவதும் ஒவ்வொரு ஃபிரேமிலும் தாறுமாறாக உள்ளது.
அனிருத்தின் பின்னணி இசையில் அவர் நடந்து வரும் காட்சிகளும், ஸ்டன்ட் செய்யும் காட்சிகளும் மிரட்டுது. ஓம் பிரகாஷ் மற்றும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். லைகா நிறுவனத்துக்கு மிகப்பெரிய வெற்றிப் படம் கிடைத்திருக்கிறது வாழ்த்துகள்” என விக்னேஷ் சிவன் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.