பொய் பேசிய விக்னேஷ் சிவன்… செம்ம டென்ஷனில் வெளியே துரத்திய அஜித்…

0
Follow on Google News

தற்பொழுது நடிகர் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகில் திருமேனி இயக்கி வருகிறார். ஆனால் மகிழ்திருமேனிக்கு முன்பு அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் தான் ஒரு படம் இயக்குவதாகவும் அதற்காக படப்பிடிப்பு தொடக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு கடைசி நிமிடத்தில் அஜித் நடிக்கும் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டு மகிழ்திருமேனி கமிட்டானார்.

இது குறித்து சமீபத்தில் விக்னேஷ் சிவன், அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய கதை அஜித்துக்கு ரொம்ப பிடித்திருந்தது ஆனால் தயாரிப்பு நிறுவனம் தான் அந்தக் கதை பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டார்கள். அதனால் தான் அந்த படம் தன் கையை விட்டு போனது போன்று விக்னேஷ் சிவன் ஒரு நேர்காணலில் பேசி இருந்தார். அதாவது அஜித்க்கு விக்னேஷ் சிவன் கதை பிடித்து விக்னேஷ் சிவன் உடன் படம் பண்ணுவதில் உறுதியாக இருந்ததாகவும்.

ஆனால் தயாரிப்பு நிறுவனம்தான் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறுவதற்கு காரணம் போன்று விக்னேஷ் பேசி வருவது பச்சை பொய் என்பது அம்பலமாகியுள்ளது. காரணம் டாப் நடிகருக்கு கதை பிடித்து விட்டது என்றால் தயாரிப்பாளர்கள் மறுப்பு சொல்ல முடியாது. அந்த வகையில் ரஜினிகாந்த் மகள் என்கின்ற ஒரே காரணத்திற்காக லால் சலாம் போன்ற ஒரு குப்பை கதையை கூட லைக்கா நிறுவனம் தயாரித்து வெளியிட்டு நஷ்டத்தை சந்தித்தது.

அப்படி இருக்கும் பொழுது அஜித்துக்கு ஒரு கதை பிடித்து அந்த கதையை பிடிக்கவில்லை என்று தயாரிப்பு நிறுவனத்தால் நிச்சயம் சொல்ல முடியாது. அப்படியே அஜித்துக்கு ஒரு கதை பிடித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு அந்த கதை பிடிக்கவில்லை என்றால் கூட, அஜித் அந்த கதையில் உறுதியாக இருந்தால் எத்தனையோ மற்ற தயாரிப்பு நிறுவனம் அஜித்தை வைத்து படம் எடுக்க போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் பொழுது அஜித்துக்கு பிடித்த கதையை நிச்சயம் லைக்கா நிறுவனம் நிராகரிக்கிறதுக்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதிப்படுத்துகிறது சினிமா வட்டாரங்கள். இந்த நிலையில் இந்த ஒரு காலகட்டத்தில் விக்னேஷ் சிவன் எதற்காக இப்படி பேசினார் என்கின்ற சில பின்னணி தகவல்களும் வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடிகர் தனுஷ் நயன்தாரா சண்டை மிகப்பெரிய உச்சத்தை எட்டி உள்ளது.

இப்படி இருக்கும் பொழுது தனுசுக்கும் நயன்தாராக்கும் இடையிலான கடும் சண்டையில் தற்பொழுது அஜித் ரசிகர்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்தால் ஒரு பலமாக இருக்கும் என்பதற்காக போகிற போக்கில் தன்னுடைய கதை அஜித் ரொம்ப பிடித்தது என்று சொன்னதெல்லாம் பச்சை பொய், அஜித் தான் தன்னுடைய படத்திலிருந்து விக்னேஷ் இவனை வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

அஜித் துணிவு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது விக்னேஷ் சிவனை படத்தின் முழு கதையையும் ஸ்கிரிப்ட்டையும் தயார் செய்ய வலியுறுத்தி இருந்திருக்கிறார். ஆனால் விக்னேஷ் சிவன் தன்னுடைய மனைவி நயன்தாராவுடன் ஊர் ஊரா சுற்றியவர், படத்திற்கான வேலையை செய்யவில்லை, அஜித் துணிவு படத்தை முடித்து வந்த பின்பு விக்னேஷ் சிவன் கதையையும் டெவெலப் செய்யவில்லை, முழு ஸ்கிரிப்ட்ம் தயார் செய்யவில்லை.

இந்நிலையில் விக்னேஷ்வனின் சோம்பேறித்தனம் அஜித்துக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி, இந்த வேலையெல்லாம் என்கிட்ட நடக்காது என்று அஜித்தான் விக்னேஷ் சிவனை விரட்டி அடித்ததாகவும், மேலும் அஜித் தான் தயாரிப்பு நிறுவனத்தில் சொல்லி வேறு ஒரு இயக்குனரை பார்த்துக் கொள்ளலாம் இவர் சரிப்பட்டு வர மாட்டார் என்று சொன்னதாகவும் கூறப்படுவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here