மணிரத்தினம் மீது வன்மத்தை கக்கிய வெற்றிமாறன்.. PS வெற்றியை பொறுத்து கொள்ள முடியாத வெற்றிமாறன்..

0
Follow on Google News

மணிரத்தினம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு தற்பொழுது திரையில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்திற்கு எதிர்மறை விமர்சனம், ஆதரவு விமர்சனம், கலவையான விமர்சனம் என்று மூன்று விதத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இருந்தாலும் எதிர்மறை விமர்சனத்தை ஏற்று கொள்கிறவர்கள் கூட அந்த படத்தில் என்ன இருக்கிறது என்பதை பார்க்க திரையரங்குக்கு படையெடுத்து வருகிறார்கள்.

சமீப காலமாக தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் பொன்னியின் செல்வன் படத்திற்கு மட்டும் தான் குடும்பம் குடும்பமாக திரையரங்குக்கு மக்கள் வருவதை பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு சோழ மன்னரை கொண்டு சேர்த்துள்ளார் மணிரத்தினம் என்று சொல்லலாம். பல திரையரங்குகளில் இதுவரை விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு தமிழக இளைஞர்கள் பாலபிஷேகம் செய்து வந்தனர்.

ஆனால் முதல் முறையாக உலகை ஆண்ட தமிழ் மன்னன் ராஜராஜன் சோழன் கட்டவுட்க்கு திரையரங்கு முன்பு தமிழக இளைஞர்கள் பால் அபிஷேகம் செய்வதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தன்னுடைய திரைப்படம் வாயிலாக அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்று, அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் மணிரத்தினம் என்பது சந்தேகமின்றி உறுதியாகியுள்ளது.

பொதுவாக ஒரு திரைப்படம் வெளியானால் அந்த நடிகரின் பெயரை குறிப்பிட்டு விமர்சனம் செய்வார்கள், வாழ்த்து தெரிவிப்பார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அந்தப் படத்தின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு, வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், ஆதித்ய கரிகாலன், குந்தவை, நந்தினி, பழுவேட்டையார் என்று குறிப்பிடுகிறார்கள், அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர்களின் பெயரை மறந்து விட்டனர்.

அந்த அளவுக்கு பொன்னியின் செல்வன் படத்தை பார்த்தவர்களுக்கு அந்த படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரம் ஆழமாக பதிந்துள்ளது. இந்த நிலையில் அனைவரையும் கவர்ந்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை உலகமே கொண்டாடி வரும் நிலையில் அதை ஜீரணித்து கொள்ள முடியாத இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்து, பெரும்பாலான தமிழர்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளார் வெற்றிமாறன்.

நிகழ்ச்சி ஒன்றில் வெற்றிமாறன் பேசுகையில், சினிமாவை திராவிடம் இயக்கம் கையில் எடுக்கும் போது, கலை கலைக்கானது தான் என பேசினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை என உணர்த்தினார்கள். அந்தக் கலையை நாம் சரியாக கையாள வேண்டும். இல்லை என்றால் ஏற்கனவே நம்மிடமிருந்த அடையாளங்களை எடுத்துக் கொள்வார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும்.

ராஜராஜ சோழனை இந்து அரசனாக காட்டுவது ஆகட்டும். இப்படி தொடர்ந்து சினிமாவில் அடையாளங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று வெற்றிமாறன் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த நிலையில் ராஜராஜ சோழன் குறித்த வெற்றிமாறனின் இந்த பேச்சு குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் பல தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ராஜராஜ சோழனை இந்து அரசன் ஆக்குவது, நமது அடையாளங்கள் பறிக்கும் செயல் என்று குறிப்பிட்டு வெற்றிமாறன் பேசியது, பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல், இந்த நாவலை தன்னால் படமாக்க முடியாமல் மணிரத்தினம் எடுத்து பாராட்டு பெற்று விட்டார் என்கிற பொறாமையின் வெளிப்பாடு தான் வெற்றிமாறனின் இந்த பேச்சுக்கு காரணம் என கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனை இந்து மன்னராக மணிரத்தினம் காட்டியது போன்று, நம்முடைய அடையாளங்களை மணிரத்தினம் போன்ற இயக்குனர்கள் பறித்து வருவது போன்று ஒரு மறைமுக தாக்குதலை தான் இயக்குனர் மணிரத்தினம் வெற்றியை பொறுத்து கொள்ள முடியாமல் தனது பேச்சின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் வெற்றிமாறன் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.