இயக்குனர் ஷங்கர் உதவியாளர் மட்டும் இத்தனை நபர்களா.!! ஒவ்வொருவருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர், தற்பொழுது ஒரே நேரத்தில் இரண்டு மிகப்பெரிய படங்களை இயக்கி வருகிறார். ஒன்று கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 மற்றொன்று தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் புதிய படம் ஒன்று, ஒரே நேரத்தில் இரண்டு படங்களை எப்படி சங்கர் இயக்குகிறார் என்று ஒட்டுமொத்த திரையுலகமும் வியப்புடன் பார்த்து வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் ஒரே நேரத்தில் ஒரு படம் இயக்கி முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது, அந்த வகையில் இன்று முன்னணி இயக்குனராக இருக்கக்கூடிய வெற்றிமாறன் விடுதலை என்கின்ற ஒரு படத்தை இயக்கவே மூன்று வருடங்கள் எடுத்து கொண்டிருக்கிறார். மேலும் அவருடைய படத்தில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்கள் கால் சீட் கொடுத்தால் எங்கே அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடியாது என்பதற்காக தெரிந்து ஓடுகிறார்.

இந்த சூழலில் மிக சாதுக்கியமாக இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வரும் சங்கரின் உதவி இயக்குனர்கள் மட்டும் 55 பேர் வேலை செய்வதாகவும் கூறப்படுகிறத. அதில் தற்போது சங்கர் இயக்கும் இரண்டு படத்திற்கும் ஒருவர் ஒருவர் முக்கிய நபர்களாக நியமிக்கப்பட்டு அந்த படத்தின் முழு வேலைகளும் அவர்கள் கவனித்து வருவதாகவும், சங்கர் அவர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் தெரிவித்து விடுவார் என்றும் மற்ற அனைத்து வேலைகளையும் அவர்களே கவனித்துக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சங்கர் எப்போதுமே தன்னுடைய உதவியாளர்களை நன்கு கவனித்து வருகின்றவர், அந்த வகையில் 20 வருடங்களுக்கு முன்பு அவர் இயக்கிய காதலன் படத்தில் உதவியாளராக பணியாற்றியவர்களுக்கு படப்பிடிப்புக்கு வருவதற்கு சிரமப்படக்கூடாது என்பதற்காக அனைவருக்கும் பைக் வாங்கி கொடுத்தவர் சங்கர்.

அந்த வகையில் தற்பொழுது சங்கர் உதவி இயக்குனர்கள் மற்றும் கோ டைரக்டர் என சுமார் 55க்கு மேற்பட்ட உதவியாளர்கள் பணி புரிவதற்கு பல லட்சங்கள் சம்பளமாக சங்கர் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது