சினிமாவில் மட்டுமல்லாமல் மீம்ஸ்களிலும் நம்மை சிரித்து வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் வடிவேலு தான். மதுரையைச் சேர்ந்த வைகை புயல் வடிவேலு, தனது நகைச்சுவையான பேச்சு, நக்கலான பாடி லாங்குவேஜ் என தனக்கே உரிய ஸ்டைலில் தமிழ் சினிமாவின் காமெடி மன்னனாக வலம் வந்தவர். இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நாயகனாக விளங்கும் நடிகர் வடிவேலு,
பிரம்மாண்ட இயக்குனரான சங்கருக்கு துரோகம் செய்து விட்டதாகக் கூறி ரசிகர்கள் அனைவரும் வடிவேலுவை திட்டி தீர்த்து வருகின்றனர்.நடிகர் வடிவேலு, பிரபல நடிகர் ராஜ்கிரன் மூலமாக ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தில் முதன்முதலாக காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து 1992 ஆம் ஆண்டு சின்ன கவுண்டர் படத்தில் நடிகர் விஜயகாந்த் க்கு குடை பிடிக்கும் பண்ணையாளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இவ்வாறு 90களின் காலகட்டத்தில் நிறைய படங்களில் நடிக்க துவங்கிய வடிவேலு, நடிகர் ரஜினி, கமல், விஜய், அஜித், பிரசாந்த் என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு சென்றார். இவர் இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் உருவான காதலன் படத்திலும் முக்கிய காமெடி ரோலில் நடித்திருந்தார்.
இப்படத்தில் வடிவேலுவின் நகைச்சுவையான நடிப்பு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கவே, இயக்குனர் சங்கர் தான் இயக்கிய முதல்வன் படத்திலும் நடிகர் வடிவேலுவை காமெடியனாக நடிக்க வைத்தார். இப்படி தமிழ் சினிமாவில் வடிவேலுவின் மார்க்கெட் உச்சத்தை நோக்கி செல்லவே வடிவேலுவுக்கு சற்று தலைகணமும் ஏற்பட தொடங்கியது என்று கூறலாம். ஆம், வடிவேலு தன்னுடன் நடிக்கும் சக காமெடி நடிகர்களுக்கு உதவி கூட செய்ய மாட்டார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்த “இம்சை அரசன் 23ஆம் புலிகேசி” என்ற படம் எதிர்பார்க்காத அளவிற்கு மாபெரும் வெற்றி அடைந்தது. இயக்குனர் சிம்பு தேவன் இயக்கிய இப்படத்தை இயக்குனர் சங்கர்தான் தயாரித்திருந்தார். அப்போது, இயக்குனர் பேச்சை கேட்காமல் இவர் வடிவேலு செய்த காரியத்தால், இயக்குனர் சங்கருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு விட்டதாம்.
மேலும் தன்னால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யும் முன் வர வேண்டும் என்று எண்ணாத வடிவேலுவினால் இயக்குனர் சங்கர் பண நஷ்டத்தால் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார். இதை துளி அளவும் கண்டுகொள்ளாத நடிகர் வடிவேலு, அடுத்தடுத்த படத்தில் நடிக்க தீவிரமாக வேலை பார்க்க ஆரம்பித்து விட்டாராம். அப்போதுதான், இயக்குனர் தம்பி ராமையா இயக்கிய இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் மீண்டும் கதாநாயகனாக வடிவேலு நடித்தார்.
ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை தராததால் மீண்டும் காமெடி கேரக்டரில் பல படங்களில் நடித்து வந்தார். இவ்வாறு வருடங்கள் பல உருண்டோடவே, சமீபத்தில் நடிகர் வடிவேலு நடித்த படங்கள் அத்தனையும் ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஒரு காலகட்டத்தில் காமெடியில் கலக்கிக் கொண்டிருந்த நடிகர் வடிவேலு, இப்போதெல்லாம் ரசிகர்களை சிரிக்க வைக்கத் தவறிவிடுகிறார் என்று பல விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் அண்மையில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் முருகேசன் கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவிற்கு எதிர்பாராத நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சந்திரமுகி படத்தில் இருந்து முருகேசன் கதாபாத்திரம் போல் அல்லாமல், இப்படத்தில் உள்ள முருகேசன் கதாபாத்திரம் அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை என்று சோசியல் மீடியாவில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, நடிகர் வடிவேலுவின் இந்த அடுத்தடுத்த வீழ்ச்சிக்கு, அவர் இயக்குனர் சங்கருக்கு செய்த துரோகம் தான் காரணம் என்றும் சினிமா ரசிகர்கள் பலரும் கரித்துக் கொட்டி வருகின்றனர். ஒருமுறை பட்ட கஷ்டத்தாலேயே, இன்று வரை இயக்குனர் சங்கர் நடிகர் வடிவேலுவை தன் படத்தில் நடிக்க வைக்கவில்லை. அப்படி என்றால் இயக்குனர் சங்கர் எந்த அளவிற்கு நொந்து போய் இருப்பார் என்று கூறப்படுகிறது.