கடன் தொல்லை..வீட்டை விற்ற இயக்குனர் சங்கர்.. எதனால் இவ்வளவு கடன் தெரியுமா.?

0
Follow on Google News

பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சங்கர் அவருடைய கடின உழைப்பினால் ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்து அடுத்தடுத்து தன்னுடைய மிக பிரம்மாண்ட படைப்புகளால் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்பட்டார் சங்கர்.

அவருடைய படங்கள் அனைத்துமே ஹாலிவுட் தரங்களுக்கு இணையாக சண்டை காட்சிகள், பாடல் காட்சிகள் இருக்கும். பொதுவாக இவருடைய படத்தில் இடம்பெறும் பாடல் காட்சி மற்றும் சண்டைக் காட்சிகளுக்கு தான் அதிக செலவுகள் ஆகும். இதனை தொடர்ந்து சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்களை அடுத்த கட்டத்துக்கு செல்ல உதவும் வகையில், தன்னுடைய உதவி இயக்குனர்கள் இயக்கும் படங்களை தானே சொந்தமாக தயாரித்தார்.

தன்னுடைய பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொடங்கினார், ஆரம்ப கட்டத்தில் அவருடைய உதவி இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல், சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, வசந்தபாலன் இயக்கத்தில் வெயில் ஆகிய படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து இயக்குனர் சங்கருக்கு பெரும் லாபத்தையும் சம்பாதித்து கொடுத்தது.

அதன் பின்பு சங்கர் தயாரிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சங்கர் தயாரிப்பில் ஏற்கனவே சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி பாகம் இரண்டை மீண்டும் சங்க தயாரிப்பதற்கான முடிவு செய்து, படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது, ஆனால் வடிவேலுவின் அட்ராசிட்டியால் அந்த படம் பாதியிலே நின்றது.

இதனால் சங்கருக்கு மேலும் பண பிரச்சினை ஏற்பட்டு, கடன் தொல்லையால் தவிர்த்து வந்த இயக்குனர் சங்கர், தனக்கு சொந்தமான ஒரு வீட்டை விற்பனை செய்து தன்னுடைய கடனை அடைத்து விட்டு அதன் பின்பு தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடியவர், படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டார். தற்பொழுது இந்தியன் 2 மற்றும் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் ஒரு படம் என இரண்டு படங்களில் பிஸியாக இருக்கிறார் சங்கர்.

இந்தியன் 2 படத்தின் உதவி இயக்குனராக இயக்குனர் வசந்த பலன் பணியாற்றி வருகிறார், அவர் தன்னுடைய இயக்கத்தில் அநீதி என்கின்ற படத்தை இயக்கியுள்ளார், இந்தப் படத்தை வசந்த பலன் மற்றும் அவருடைய நண்பர்கள் இணைந்து கூட்டாக சொந்தமாக தயாரிக்கிறார். இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் உதவி இயக்குனராக இருக்கும் வசந்தபாலன், தான் புதியதாக இயக்கியுள்ள அநீதி படத்தை பற்றி அடிக்கடி சங்கரிடம் பேசி உள்ளார்.

மேலும் தனக்கு இந்த தயாரிப்பு தொழில் என்பது புதிதாக இருக்கிறது, அதனால் படத்தை வெளியிடுவதில் தான் மிகவும் சிரமப்பட்டு வருவதையும் சங்கரிடம் தெரிவித்துள்ளார் வசந்த பாலா. இந்நிலையில் அநீதி படத்தை பார்த்த சங்கர், படம் மிகவும் பிடித்து போக இந்த படத்தை நானே வெளியிடுகிறேன் என்று, நீண்ட காலமாக இழுத்து மூடப்பட்டுள்ள தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை மீண்டும் திறந்து வசந்த பலன் இயக்கிய அநீதி படத்தை சங்கர் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை மனைவி இவ்வளவு சம்பாரிக்கிறாங்களா… அண்ணாமலை பேச்சு…