நடிகர் சரத்குமார் நடிப்பில் சூரியன் படத்தில் உதவி இயக்குனராக சங்கர் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அவர் தங்கி இருந்த அறையில் சக நண்பர் மூலம் ஒரு தகவல் அவருக்கு கிடைக்கிறது. தனக்கு தெரிந்த ஒரு விநியோகஸ்தர் புதியதாக படம் தயாரிக்க இருக்கிறார், சினிமாவில் இயக்குனர் வாய்ப்பு தேடி வரும் புதுமுக இயக்குனரை வைத்து படம் எடுப்பதற்கு விருப்பமாக உள்ளார், என தெரிவித்து சங்கரை கதை சொல்ல தன்னுடைய ஓட்ட பழைய ஸ்கோட்டரில் கே.டி குஞ்சுமேனனிடம் அழைத்து செல்கிறார் ஷங்கரின் நண்பர்.
சங்கரிடம் ஜென்டில்மேன் படத்தின் கதையை கேட்ட கே.டி குஞ்சுமேனன் உடனே ஓகே செய்த்தவர், தான் தயாரிக்கும் முதல் படம் மிக பிரமாண்டமாக இருக்க வேண்டும், அதனால் இந்த படத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்கலாம் என கமல்ஹாசனிடன் ஷங்கரை கதை சொல்ல அனுப்பி வைக்கிறார் கே.டி குஞ்சுமேனன், ஆனால் ஷங்கர் புது முக இயக்குனர் என்பதால் கமல்ஹாசன் கதையை ஏனோதான என்று கேட்டுவிட்டு அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார்.
அடுத்து சரத்குமார், விஜயகாந்த் என பலரை ஜெண்டில்மேன் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து அது கைகூட வில்லை, இந்நிலையில் நடிகர் அர்ஜுனிடம் கதை சொல்லிஇறுதியில் கமிட் செய்யப்பட்டார். ஜென்டில்மேன் படத்தின் படப்பிடிப்புக்காக செலவுகளை சற்றும் யோசிக்காமல், இயக்குனர் சங்கருக்கு என்ன தேவையோ.? என் அனைத்து வசதிகளையும் பிரம்மாண்டமாக செய்து கொடுத்தவர் கே.டி குஞ்சுமேனன்.
இந்த நிலையில் படம் வெளியாகி முதல் இரண்டு நாட்கள் அந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் சென்றது. இதற்கு காரணம் இது ஏதோ தெலுங்கு டப்பிங் படம் என மக்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டவில்லை, இதனை தொடர்ந்து, அப்போது இன்று போல் தொலைக்காட்சி சேனல் அதிகம் கிடையாது, தூர்தசன் தொலைக்காட்சி மட்டும் தான் இருந்தது, ஒவ்வொரு வெள்ளி கிழமை இரவு 7.30 மணிக்கு தூர்தசன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியை பார்க்க மக்கள் தொலைக்காட்சி முன்பு குவிந்திருந்த காலம் அது.
இந்நிலையில் ஜெண்டில்மேன் படத்தில் இடம் பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலை, காசு கொடுத்து ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் வாரம் வாரம் தொடர்ந்து ஒளிபரப்ப வைத்தார் கே.டி குஞ்சுமேனன். இதன் பின்பே ஜெண்டில்மேன் படம் ஒட்டிக்கொண்டிருக்கும் திரையரங்கில் மக்கள் குவிய தொடங்கினார்கள்.படம் மிக பெரிய ஹிட். முதல் படமே சங்கருக்கு பெரும் புகழும் பெற்று தந்தது ஜெண்டில் மேன், இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கே.டி குஞ்சுமேனன்.
இந்நிலையில் அடுத்து ஷங்கர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் போட்டி போட்டு கொண்டிருக்க, பல தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்க, மீண்டும் ஷங்கரை வைத்து தொடர்ந்து படம் எடுக்க கே.டி குஞ்சுமேனன் முடிவு செய்ததை தொடர்ந்து, தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமேனன் என்பதால் அவருடைய தயாரிப்பில் படம் பண்ணுவதர்க்கு கமிட்டானார் ஷங்கர்.
கே.டி குஞ்சுமேனன் – ஷங்கர் கூட்டணியில் காதலன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது, ஏற்கனவே ஜெண்டில்மேன் படத்தில் வாங்கிய அதே சம்பளத்தை ஷங்கருக்கு கே.டி குஞ்சுமேனன் கொடுக்கிறார். ஆனால் ஷங்கர் மேலும் 1 லட்சம் சம்பளம் அதிகரித்து கொடுக்க கேட்கிறார். கே.டி குஞ்சுமேனன் முடியாது என மறுக்க, ஷங்கர் சம்பளத்தை அதிகரித்து கேட்க ஒரு கட்டத்தில் டென்ஷனாகிறார் கே.டி குஞ்சுமேனன்.
ஒரு கட்டத்தில் தன்னுடைய டேபிள் மேல் இருந்த துப்பாக்கியை காண்பித்து, நீ ஓட்ட ஸ்கூட்டரில் கதை சொல்ல வந்ததை மறந்து விட்டியா.? என தகாத வார்த்தைகளால் ஷங்கரை அவமான படுத்தும் விதத்தில் கே.டி குஞ்சுமேனன் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காதலன் படத்தை முடித்து கொடுத்த பின்பு கே.டி குஞ்சுமேனனை விட்டு விலகிய ஷங்கர் அடுத்தடுத்து பிரமாண்ட படைப்புகளால் இன்று மிக பெரிய உச்சத்தில் இருக்கிறார், ஆனால் கே.டி குஞ்சுமேனன் அடுத்தடுத்து தோல்வி படங்களை தயாரித்து, எங்கே இருக்கிறார் என்று தெரியாத அளவுக்கு உள்ளார் என்கிறது சினிமா வட்டாரங்கள்.