இயக்குனர் சங்கரை அவமானப்படுத்தி வெளியே விரட்டி முக்கிய பிரபலம்… எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமேனன் பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். மற்ற தயாரிப்பாளர்கள் போன்று இயக்குனர்கள், நடிகர்களை அனுசரித்து செல்ல கூடிய நபர் கிடையாது, அவருடைய மீசைக்கு ஏற்ற கம்பிரம் அவரிடம் இருக்கும், எதுவாக இருந்தாலும் நேரடியாக பேசி, முடியும் முடியாது என பேசக்கூடியவர் கே.டி.குஞ்சுமேனன், அந்த வகையில் அமராவதி படத்தில் நடித்து முடித்த நடிகர் அஜித்குமார் அடுத்த பட வாய்ப்புக்காக கே.டி.குஞ்சுமேனன் அலுவலகத்து சென்றுள்ளார்.

அமராவதி படத்தில் 30 ஆயிரம் சம்பளம் வாங்கி இருக்க அதே சம்பளத்தை வாங்கி கொள் என கே.டி.குஞ்சு மேனன் தெரிவிக்க, அதற்கு புதிய படத்தில் 50 ஆயிரம் அஜித் கேட்க, அதெல்லாம் தர முடியாது போ.. போ.. என அனுப்பியுள்ளார், அந்த அளவுக்கு ரெம்ப காரரானவர் கே.டி.குஞ்சுமேனன் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் பவித்ரன் இயக்கத்தில் சூரியன் படத்தை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமேனன், அந்த படத்தின் உதவி இயக்குனராக இருந்தவர் சங்கர்.

உதவி இயக்குனராக இருந்து கொண்டே, இயக்குனராக முயற்சி செய்து வந்த சங்கர். கதையை தயார் செய்துவிட்டு அந்த கதைக்கான தயாரிப்பாளரை தேடி வந்துள்ளார் சங்கர். அப்போது சூரியன் படத்தில் பணியாற்றிய போது, அந்த படத்தின் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமேனன் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்ற சங்கர், தன்னிடம் ஒரு கதை உள்ளது, கேட்டு பாருங்க என கே.டி. குஞ்சுமேனனிடம் தெரிவித்துள்ளார் சங்கர்.

சூரியன் படத்தில் உதவி இயக்குனராக சங்கர் பணியாற்றிய போது, அவர் அந்த படத்தில் நடித்த நடிகர் சரத்குமாருக்கு காட்சிகளை விளக்கும் செயல், டைலாக் சொல்லி தரும் விதங்களை பார்த்து ஏற்கனவே வியர்த்து பார்த்த கே.டி.குஞ்சுமேனன். சங்கரை தன்னுடைய அலுவலகத்திற்கு வந்து கதை சொல்ல அழைத்துள்ளார். பின்பு கதை பிடித்து போக ஜென்டில்மேன் படத்தை தயாரிக்க முன் வந்தார் கே.டி.குஞ்சுமேனன்.

இந்த படத்துக்கு தேவையான அணைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார் கே.டி.குஞ்சுமேனன், இந்த படத்திற்கு இசை அமைக்க இளையராஜாவை சந்தித்து வருவதற்கு சங்கரை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் உதவி இயக்குனராக சங்கர் இருந்த போதே இளையராஜாவுக்கு சங்கருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சங்கர் படத்திற்கு இசையமைக்க மறுத்துவிட்டார் இளையராஜா.

இருந்தாலும் பரவாயில்லை என சங்கர் மீது உள்ள நம்பிக்கையில், வேறு ஒரு இசை அமைப்பாளரை வைத்து படம் எடுத்து கொள்ளலாம் என முடிவு செய்து கேடி குஞ்சுமேனன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படம் மிக பெரிய ஹிட் கொடுத்தது, இதனை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இரண்டாவது படம் காதலன் படத்தையும் கே.டி.குஞ்சுமேனன் தயாரித்தார்.

இந்த படமும் மிக பெரிய வெற்றியை பெற்று தந்தது. இயக்குனர் ஷங்கரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்த பெருமை கே.டி.குஞ்சுமேனனை தான் சேரும், இந்நிலையில் காதலன் படம் முடிந்த பின்பு கே.டி.குஞ்சுமேனனை சந்திக்க நேரம் கேட்டு நேரில் சந்திக்க சென்றுள்ளார் இயக்குனர் ஷங்கர், அப்போது தன்னுடைய இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தின் கதையின் உரிமையை தனக்கு கொடுக்க கேட்டு கொண்டுள்ளார் ஷங்கர்.

இதற்கு கே.டி.குஞ்சுமேனன் மறுத்துள்ளார், தொடர்ந்து கதை என்னுடன் தானே, கதையின் உரிமையை எனக்கு தாங்க என ஷங்கர் கேட்க, ரெம்ப டென்ஷனான உனக்கு கதையின் உரிமையை தர முடியாது, இதுக்கு மேல ஒரு வார்த்தை பேச கூடாது என கோபம் பட்ட கே.டி.குஞ்சுமேனன் முதலில் இங்கே இருந்து வெளியே போ…என்று சங்கரை அங்கே இருந்து விரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பெரும் வெற்றி படங்கங்களை கொடுத்த தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமேனன் சுமார் 20 வருடங்களுக்கு பின்பு மீண்டும் சினிமா தயாரிக்க முடிவு செய்து, ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் தயாரிக்க இருப்பது குறிப்பிடதக்கது.