5 பசங்க யூடியூப் சேனல் நடத்தறாங்க, நாட்டுல நடக்கற லஞ்சம், ஊழல் எல்லாத்தையும் நக்கல் பண்ணி வீடியோ போடறாங்க, கடைசியில அவங்கனால எதுவுமே செய்ய முடியாதுன்னு தெரிஞ்சு Come Back Indian ன்னு டிரெண்ட் பண்ண, இந்தியன் தாத்தா வரார்… படம் ஆரம்பிச்சு ஒரு 20 நிமிஷம், சீன் எல்லாம் படு வேகமா மூவ் ஆகி, ஸ்க்ரீன்பிளே நல்லா இருக்கற மாதிரி இருக்க, ஆஹா, பரவாயில்லை படம் நல்லா தானே இருக்கு என மக்கள் நினைக்க.. இந்தியன் தாத்தா என்ட்ரி கொடுக்கிறார்.
படம் பாட்டுக்கு வேற ஒரு கதைல போயிட்டு இருக்கு, தாத்தா அவரு பாட்டுக்கு எங்கயோ மாறு வேசத்துல போய் ஊர் ஊரா கொலை பண்ணிகிட்டு இருக்கார், யார் பெத்த புள்ளையோ இப்படி தனியா திரியுதுன்ற மாதிரி படத்துக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லைன்னு சுத்தறார் இந்தியன் தாத்தா. இதுல ஒவ்வொரு வர்ம அடிக்கும் என்ன பேர், அதனால என்ன ஆகும்ன்னு செத்துகிட்டு இருக்கரவன் கிட்ட லேகியம் விக்கரவன் மாதிரி செந்தமிழ்ல விளக்கம் வேற.
அட ஏதாவது ஒரு தடவை அதை பண்ணா பரவாயில்லை, ஒவ்வொரு வர்மத்துக்கும் சொல்லி, சீன் எல்லாம் அவ்வளவு நீளம். இதுல சென்டிமென்ட் சீன் வேணும்ன்னு வேற 4 சீன வான்டட்டா சொருகியது போன்று அமைந்துள்து. இந்தியன் தாத்தா மேக்அப்ல் மூஞ்சி ஒரு கலர், கழுத்து ஒரு கலர், கை ஒரு கலர்ன்னு பரிதாபமா இருக்கார். மியூசிக் பற்றி சொல்லனும்னா இதை விட மோசமா ஒரு பேக்கிரவுண்ட் பண்ணவே முடியாது என்பது போன்று அமித்துள்ளது.
கடைசி முக்கால் மணி நேரம் வெறும் சண்டை, எங்க எங்கயோ போய் எப்படியோ படம் முடியுது. வர்மக்கலை மேல ஒரு அவர்சன் வர்ற அளவுக்கு இந்த படத்துல பண்ணி இருக்காங்க, படத்துல ஒண்ணுமே நல்லா இல்லையான்னு கேட்டா, இருக்கு. அப்போ அப்போ இந்தியன் 1ல ரஹ்மான் போட்ட BGM வரும்போது மட்டும் தியேட்டர் கிழியுது. அப்பறம் விவேக், நெடுமுடி வேனு எல்லாம் AIல நல்லா கொண்டு வந்து இருக்காங்க.
இந்தியன் 1 எப்பேர்பட்ட படம், என்ன மாதிரி கூர்மையான வசனங்கள், காமெடி, தெரிக்கிற ஸ்கிரீன் பிளே, பிண்ணி எடுத்த பாட்டு, முயுசிக்ன்னு எதுவுமே குறை சொல்ல முடியாத ஒரு பேக்கேஜ்.அதை அப்படியே விட்டு இருக்கலாம், Indian 2 is the biggest disgrace to Indian 1.
இந்தியன் 1 படத்தின் பாடல்களில் ‘ஓஹ்ஹோ ஓஹொஹ் ஹோ’ ன்னு பாடல் ஆரம்பிக்கறப்பவே செம feel குடுக்கும், ஒரு செமயான பாட்டுக்குத் தயாராகுங்கன்னு அந்த ஹம்மிங் சொல்லும். அப்றம் அந்த beat உடன் ‘கப்பல் ஏறிப்போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா’ ன்னு போயிட்டே இருக்கும். கடைசீல ‘சாரே சஹான்சே அச்சா..’ இசையைக் கலந்து முடியும். இப்பக் கேட்டாலும் Goosebumps வரும் !
அதே போன்று ‘தந்தா நானே தானானே ஆனந்தமே..’ இப்படி ஆரம்பிக்கற அந்தப் பாட்டெல்லாம் சொர்க்கம். அது குடுத்த feel , அதனுடைய Rhythm எப்பவும் frsehஆ இருக்கக் கூடியது. ‘பச்சைக் கிளிகள் தோளோடு’ பாட்டெல்லாம் ஒரு வாழ்வியல். இந்தியன் எல்லாம் என்னா ஆல்பம் அது. இப்படி எல்லாம் பாட்டைக் கேட்டுட்டு ‘தாத்தா வராரு’ அப்படீங்கறதையும் பாட்ட மக்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.
சங்கர் சார் என்ன படம் சார் இது .? இதுதான் உங்க படம்ன்னா இதுக்கு முன்னாடி எடுத்த படம் எல்லாம் யார் எடுத்தா, இல்லை அது எல்லாம் உங்க படம்னா இதை யார் எடுத்தா ????? என மக்கள் குழம்பி போய் உள்ளனர். ஒரு வேலை சுஜதான்னு ஒரு ஆள் இல்லாம இப்படி தவிக்கிறாரா.? சங்கர் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.